மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

மார்வெலின் ‘லோகி’ வெப் சீரிஸ் செய்த சாதனை

மார்வெலின் ‘லோகி’ வெப் சீரிஸ் செய்த சாதனை

மார்வெல் படங்களில் இடம் பெறும் ஒவ்வொரு கேரக்டருமே, ரசிகர்கள் மனதில் ஒரு இடம் பிடித்துவிடுகிறது. அப்படி, ரசிகர்களின் ஃபேவரைட் கேரக்டர்களை மட்டும் வைத்து தனி படமோ, வெப் சீரிஸோ உருவாக்கியும் வருகிறது மார்வல். அப்படி, அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் ப்ளாக் விடோ கேரக்டரை தனியாக எடுத்து ஒரு படமாக உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படமும் ரிலீஸூக்காகக் காத்திருக்கிறது. அப்படி, மார்வெலின் மற்றுமொரு முக்கிய கேரக்டர் லோகி.

தோர் படங்கள் மூலமாகவும், அவெஞ்சர்ஸ் மூலமாவும் பிரபலமான கேரக்டர் தான் லோகி. தோரின் தம்பியான இந்த கேரக்டர் ஆரம்ப காலத்தில் மார்வெல் படங்களில் வில்லனாக காட்டப்பட்டது. ஒவ்வொரு படத்திலும் க்ளைமேக்ஸில் திருந்திவிடும் பிரகாஷ்ராஜ் மாதிரியானது லோகி ரோல். அதனால், தோர் பட வரிசைகளில் கடைசியாக வெளியான ‘தோர் ராக்னரோக்’ படத்திலும், இன்ஃபினிட்டி வார் படத்திலும் நல்லவனாக லோகி ரோலைக் காட்டியிருப்பார்கள்.

கேரக்டராகவே ஃபேன்ஸைக் குழப்பும் இந்த லோகியின் உண்மையான குணம் என்ன என்று தெளிவுப்படுத்தவே இந்த ‘லோகி’ பட சீரிஸ். . Kate Herron இயக்கிருக்கும் இந்த சீரிஸ்ஸில் லோகி கேரக்டரில் Tom Hiddleston நடிக்க, அவருடன் இணைந்து Mobius எனும் முக்கியமான கேரக்டர்ல Owen Wilson நடித்திருக்கிறார். கடந்த 9ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் படம் வெளியானது. இந்தப் படத்துக்கு எதிர்பார்த்ததை விட, மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே இந்த சீரிஸின் டிரைலர் மற்றும் நிறைய ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகியிருந்ததால், சீரிஸின் முதல் நாள் பார்வையாளர்கள் இது வரைக்கும் எந்த ஒரு மார்வெல் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு அதிகம் என சொல்கிறார்கள். ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் போது முதல் நாள் வசூல் எத்தனை கோடி என கணக்கிடுவது போல, ஓடிடியில் வெளியாகும் படங்களின் ‘வியூவ்ஸ்’ அடிப்படையில் படத்தின் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு நாளில் எத்தனை லட்சம் மக்கள் இந்த வெப் சீரிஸைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொருத்து படத்தின் வெற்றியை நிர்ணயிக்கலாம்.

மார்வலில் இருந்து இதற்கு முன்பாக வெளியான ‘WandaVision’ முதல் நாளில் 655 லட்சம் பார்வையாளர்களையும் The Falcon and the Winter Solider படமானது 759 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்த நிலையில், லோகி சீரிஸ் முதல் நாளில் 890 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. அடுத்து வெளியாக இருக்கும் ப்ளாக் விடோ இந்த சாதனையை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 12 ஜுன் 2021