மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

கெளதமிக்கு பதில் யார்? பாபநாசம் 2 கேம் ப்ளான் !

கெளதமிக்கு பதில் யார்? பாபநாசம் 2  கேம் ப்ளான் !

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகம் போலவே, இரண்டாம் பாகமும் பெரிய வெற்றியைப் பெற்றது. பொதுவாக, இரண்டாம் பாகமாக வரும் படமெல்லாம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாது. ஏனெனில், முதல் பாகம் கொடுத்த வெற்றியினால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியிருக்கும். அதைப் பூர்த்தி செய்யும் கதையுடன் இயக்குநர் களமிறங்கினால் மட்டுமே, இரண்டாம் பாகத்தின் வெற்றி சாத்தியமாகும். அதை கச்சிதமாக செய்துக் காட்டினார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

த்ரிஷ்யம் முதல் பாகமானது தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ், சீன மொழி மற்றும் சிங்கள மொழிகளில் ரீமேக் ஆனது. இந்நிலையில், இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்யும் பணிகள் மும்முரமாகியிருக்கிறது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க படத்தை 45 நாட்களுக்குள் முடித்துவிட்டனர். மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் த்ரிஷ்யம் 2 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. கன்னடம், இந்தி, சீன ரீமேக்கும் தயாராகிவருகிறது.

தற்பொழுது, தமிழில் பாபநாசம் 2 படத்துக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கிறது. கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ், ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரிஷயம் படத்தை அப்படியே ரீமேக் செய்து வைக்காமல், நெல்லை வட்டார தமிழ், லொக்கேஷன், பாடல்காட்சிகள், க்ளைமேக்ஸ் என கொஞ்சம் புதுமையுடன் பாபநாசம் வெளியானது. மலையாள வெர்ஷன் பார்த்தவர்களுக்கு கூட, பாபநாசம் புது அனுபவமாக இருக்கும். அந்த புது அனுபவமே பாபநாசம் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

பாபநாசம் துவங்குவதில் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது. ஒன்று, கமல்ஹாசனும், கெளதமியும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். அதனால், பாபநாசம் 2வில் கமலுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் ? கெளதமி நடிப்பது சாத்தியமில்லை என்பதால், வேறு நடிகையை நடிக்க வைக்க யோசித்துவருகிறது படக்குழு. மலையாள வெர்ஷனில் நடித்த மீனாவை நடிக்க வைக்கலாமா அல்லது கமல்ஹாசனுடன் 80களில் நாயகியாக நடித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் திட்டமாம்.

இரண்டாவது, லைகாவுக்கும், ஷங்கருக்கும் நடுவே இருக்கும் கருத்துவேறுபாட்டினால் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. அதோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படமும் லைனில் இருக்கிறது. நீதிமன்ற வழக்கில் இருக்கும் இந்தியன் 2 சிக்கல் முடிவுக்கு வந்தால் தான் மற்ற படங்களை துவங்கவும் முடியும். கூடவே, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் சீக்கிரமே துவங்கிவிடும். இந்தப் பணிகளுக்கு நடுவே, 30 நாட்களுக்குள் பாபநாசம் ஷூட்டிங்கை முடிப்பது போல ஒரு திட்டத்துடன் இருக்கிறாராம் கமல்.

பாபநாசம் 2 படத்தை ஜீத்து ஜோசப் இயக்க,நடிகை ஸ்ரீப்ரியா தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது. இப்படம், மூன்று மாதங்களுக்குள் துவங்கினால் நிச்சயம் இந்த வருடத்துக்குள் படம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

சனி 12 ஜுன் 2021