மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

கரீனா கபூர் கேட்ட 12 கோடி ரூபாய் சம்பளம்!

கரீனா கபூர் கேட்ட 12 கோடி ரூபாய் சம்பளம்!

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதல் இடத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவரை பத்தாண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் இணைந்து நடிக்க விரும்பும் இந்தி நடிகை யார் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த கோடம்பாக்க சினிமா பிரபலங்களும் அந்த நிகழ்வில் கீழே அமர்ந்திருந்தனர். சற்றும் தாமதிக்காமல் விஜய் சொன்ன பெயர் கரீனா கபூர். கதாநாயகனும் ஆசை கொள்ளும் நாயகியாக இந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் கரீனா கபூர். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எட்டு கோடி ரூபாய் என்கிறது இந்தி திரைப்பட உலகம்.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு புதிய திரைப்படம் உருவாகவிருக்கிறது. ராமாயணக் கதையை வைத்து உருவாகவிருக்கும் இந்தத் திரைப்படம் 3-டி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரியும், மாம் படத்தை இயக்கிய ரவி உடையாரும் இணைந்து இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் சீதையாக நடிக்கத்தான் கரீனா கபூரை அணுகியிருக்கின்றனர். அவர் இந்தப் படத்தில் நடிப்பதற்காக 12 கோடி ரூபாயை சம்பளமாகக் கேட்டிருப்பதுதான் இப்போது இந்தி திரையுலகில் பரபரப்பு செய்தி.

கரீனா கபூர் தற்சமயம் பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக எட்டு கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அவர் 12 கோடியை சம்பளமாகக் கேட்டது அந்தப் படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் கரீனா கபூர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்கின்றனர் இந்தி சினிமாவில். புதிய ராமாயணம் படத்துக்காக கரீனா கபூரிடம் தயாரிப்பு தரப்பு 10 மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.

எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் படத்துக்கு அதிகபட்சமாக நாற்பது நாட்கள் கால்ஷீட் கொடுப்பது கரீனா கபூர் வழக்கம். மொத்தமாக 300 நாட்கள் கால்ஷீட்டைக் கேட்டதால் தனது சம்பளத்தையும் கரீனா கபூர் உயர்த்தி கேட்டாராம். சீதையின் கதாபாத்திரத்துக்கு இந்தி நடிகைகளில் எவரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதால் கரீனா கபூர் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக, புதிய ராமாயணம் படம் மூலம் சாதனை நிகழ்த்துவார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வெள்ளி 11 ஜுன் 2021