மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

யுவன் - சிம்பு காம்போ... மாநாடு முதல் சிங்கிள் எதிர்பார்ப்பு!

யுவன் - சிம்பு காம்போ... மாநாடு முதல் சிங்கிள் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான், கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் சுப்புராஜ் - சந்தோஷ் நாராயணன் என ஒரு சில கூட்டணி இணைந்தாலே ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கும். துள்ளலாக, புதுமையாக ஒன்றாக அந்தக் கூட்டணி இருக்கும். அப்படியான ஒரு காம்போ சிம்பு - யுவன்.

இசை மீது காதல் கொண்டவர் சிம்பு. இவரும் யுவனும் ஒரு படத்தில் இணையும்போது இசை இரட்டிப்பாகும். மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், சிலம்பாட்டம், வானம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களில் சிம்பு - யுவன் காம்போ கேட்டு ரசித்திருக்கிறோம்.

‘எவண்டி உன்ன பெத்தான்..’ என இளைஞர்களின் பல்ஸ் பிடிப்பார்கள். ‘என் ஆசை மைதிலியே’ எனக் குத்தாட்டம் போட வைப்பார்கள். ‘காதல் வளர்த்தேன்’ என காதலில் லயிக்க விடுவார்கள். ‘லூசுப் பெண்ணே’ என டிரெண்டுக்குள் இருப்பார்கள். ‘மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான்’ என இளையராஜா குரலை வசமாக்கியிருப்பார்கள். இப்படி, இந்த காம்போ யூத் ஃபுல்லான பாடல்களைக் கொடுத்திருக்கிறது. மீண்டும் இந்த காம்போ மாநாடு படத்துக்காக இணைந்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தயாராகிவருகிறது. அரசியலை மையமாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகிவருகிறது. சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். மாநாடு படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அப்துல் காலிக் எனும் கேரக்டரில் சிம்பு நடித்திருக்கிறார்.

மாநாடு படத்தின் பாடல்கள் ரிலீஸ் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இறுதியாக, மாநாடு படத்தின் பாடல் உரிமையை யுவன் பெற்றதைத் தொடர்ந்து, பாடல் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் முதல் சிங்கிள் வருகிற ஜூன் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த காம்போ வழக்கமான ஓர் இசையைக் கொடுக்கப் போவதில்லை. நிச்சயம் புதிதாக ஒன்றிருக்கும்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வெள்ளி 11 ஜுன் 2021