மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

எக்கச்சக்க ஆச்சரியங்களுடன் மீண்டும் ஜூராசிக் வேர்ல்டு!

எக்கச்சக்க ஆச்சரியங்களுடன் மீண்டும் ஜூராசிக் வேர்ல்டு!

உலகத்தையே கலக்கிய ஹாலிவுட் படங்களில் ஒன்று ஜூராசிக். மனித தோன்றலுக்கு முன்பாக, வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோசர்களை வைத்து கதையைச் சொல்லி உலக சினிமா ரசிகர்களையே மிரட்டியது ஜூராசிக் பட வரிசைகள். தற்போது, ஜூராசிக் வேர்ல்டு எனும் டைட்டில் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் பிரமாண்டமாக ஜூராசிக் பார்க் படம் 1993இல் வெளியானது. இதைத்தொடர்ந்து, 1997இல் தி லாஸ்ட் வேர்ல்டு மற்றும் 2001இல் ஜூராசிக் பார்க் 3 படங்கள் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புது வெர்ஷன் ஜூராசிக் கதைகளைக் கொண்டுவந்தது ஹாலிவுட். அப்படி, 'ஜூராசிக் வேர்ல்டு' எனும் திரைப்படம் 2015இல் வெளியானது. தொடர்ந்து, இரண்டாம் பாகமானது 2018இல் வெளியானது. மூன்றாவது பாகமானது தற்போது உருவாகிவருகிறது.

‘ஜூராசிக் வேர்ல்டு டொமினியன்’ எனும் மூன்றாவது பாகத்தின் ஷூட்டிங் வேலைகள் கடந்த வருடம் தொடங்கியது. மொத்தமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு தொடங்கினார்கள். ஆனால், கொரோனாவினால் ஷூட்டிங் தடைப்பட்டது. தற்போது, சீரான வேகத்தில் நடந்துவருகிறது.

படத்தின் ஹைலைட் என்னவென்றால், ஜூராசிக் வேர்ல்டு நடிகர்களுடன் இணைந்து க்ளாசிக் சீரிஸான ஜூராசிக் பார்க் பட நடிகர்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர். உதாரணமாக, மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மாதிரி ஒரு டீம் ஆஃப் மூவியாக இருக்கப் போகிறது. ஜூராசிக் படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது கூடுதல் ட்ரீட் தான்.

இந்தப் படத்தில் நான்கு வகையான டைனோசர்களைக் காட்டப் போகிறார்களாம். இந்தப் படத்தை 2022 சம்மருக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதோடு, வருகிற 25ஆம் தேதி ஐமேக்ஸ் தியேட்டரில் ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டிருக்கிறது படக்குழு. அதில், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியர்ஸ் 9 படத்தோடு சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய ஜூராசிக் வேர்ல்டு டொமினியன் பட டிரெய்லரை வெளியிட இருக்கிறார்கள்.

சோகம் என்னவென்றால், இதுதான் ஜூராசிக் படங்களின் வரிசையில் கடைசிப் படம்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வெள்ளி 11 ஜுன் 2021