மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

போலி ட்விட்டர் கணக்கு : சார்லி போலீஸில் புகார்!

போலி ட்விட்டர் கணக்கு : சார்லி போலீஸில் புகார்!

சினிமாவில் வெற்றிபெறுவதற்கும் வெற்றிபெற்ற பின் அதனைத் தக்கவைப்பதற்கும் நாய்படாதபாடுபட வேண்டும் என்பார் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.

இதனையே நடிகர் வடிவேல் சமகாலத்தில், கமல்ஹாசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய போது, வேறுவிதமாகக் கூறினார். "கொஞ்சம் அசந்தோம் என்றால் கால்வைக்கிற இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைச்சுரானுங்க” என்றார்.

மாறிவரும் தொலைத்தொடர்பு அதனையொட்டிய இணையதளம், சமூக வலைதளங்கள் என கூறப்படும் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் இவை எல்லாம் கடந்த தலைமுறை காலத்தில் அறிமுகமாகவில்லை.

இப்போது பயன்பாட்டில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்குவதற்குள் புதிய மாற்றம் வந்துவிடுகிறது.

இவற்றில் தங்களது பெயரில் போலிக் கணக்கை தொடங்கி தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பதா, தொழில்ரீதியாக வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள போராடுவதா என்பதை எண்ணி தமிழ் சினிமா கலைஞர்கள் கலக்கமடைந்து வருகின்றனர். இவற்றுக்குச் சர்வதேச பிரபலம் மணிரத்னம் முதல் ஓய்வுபெறும் நிலையில் உள்ள காமெடி நடிகர் சார்லி வரை தப்பவில்லை.

கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், மயில்சாமி உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கியிருந்தார்கள். அதற்கு அவர்கள் அனைவருமே இது போலியானது என மறுப்பு தெரிவித்திருந்தார்கள், அந்த வரிசையில் இப்போது சார்லியும் இணைகிறார்.

சார்லியின் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அதில் இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்ற பதிவு வெளியாகியிருந்தது. இதை வைத்து பலரும் நடிகர் சார்லியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர தொடங்கினார்கள்.

தற்போது இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார் சார்லி. இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி இன்று(11.06.2021) போலி https://twitter.com/ActorCharle ட்விட்டர் கணக்கு தொடங்கி இருக்கிறார்கள், இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

வெள்ளி 11 ஜுன் 2021