மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

மாஸ்டர் இந்தி ரீமேக்: விஜய் ரோலில் இவரா ?

மாஸ்டர் இந்தி ரீமேக்:  விஜய் ரோலில் இவரா ?

தமிழில் ஹிட்டாகும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக்காவதும், அதுபோல மற்ற மொழிப் படங்களும் தமிழில் ரீமேக் ஆவதும் காலம் காலமாக நடந்துவருகிறது. அப்படி, எக்கச்சக்க பண்டமாற்று முறைகள் இந்திய சினிமாவில் நடப்பது இயல்பு. இந்த வரிசையில் புது சென்சேஷன் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்.

விஜய், விஜய்சேதுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரிக்கு வெளியானது ‘மாஸ்டர்’. விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷன் என இளம் நடிகர்களும் படத்தில் இடம்பெற்றிருந்தனர். அனிருத் இசையில் பாடல்களும், வில்லனாக விஜய்சேதுபதியும் அதகளப்படுத்தியிருந்தனர். இப்படம் தமிழில் வெளியானது மட்டுமின்றி, இந்தியில் டப் செய்யப்பட்டும் ஒரே நேரத்தில் ரிலீஸானது.

இந்நிலையில், மாஸ்டர் ஸ்கிரிப்ட் பாலிவுட் சினிமாவை ஈர்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. எண்டமோல் ஷைன் நிறுவனத்துடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி வெர்ஷனுக்கு ஹீரோவாக சல்மான் கான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் ராதே சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸூக்குப் பிறகு, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க பண்ணை வீட்டுக்குச் சென்றார் சல்மான் கான். அந்த நேரத்தில் தான் மாஸ்டர் படத்தை சல்மான் கான் குடும்பத்துடன் பார்த்ததாகச் சொல்கிறார்கள். விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான்கான் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள். அதோடு, விஜய்சேதுபதி ரோலுக்கு அவரை விட சிறந்த மாற்று யாரும் இல்லை என்பதை படக்குழு உணர்ந்தாலும், பாலிவுட்டின் ஸ்டார் நடிகரைத் தேடும் பணியிலும் படக்குழு இறங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமிழில் விஜய்யை விட விஜய்சேதுபதி ரோலுக்கு வெயிட் ஜாஸ்தியாக இருந்தது. குறிப்பாக, படத்தின் ஒட்டுமொத்த பாராட்டையும் விஜய் சேதுபதி தட்டிச் சென்றார். அதனால், இந்தியில் சல்மான் கானுக்கு ஏற்றமாதிரி முழு படமும் மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கிறதாம். சல்மான் கான் உறுதியானதும் ஒரு மாதத்துக்குள் இயக்குநரை உறுதி செய்யவும் திட்டமாம்.

தமிழில் விஜய் நடித்த போக்கிரி மற்றும் காவலன் இரண்டு படங்களின் இந்தி ரீமேக்கிலும் சல்மான்கான் நடித்தார். அதனால், மாஸ்டரில் நடிப்பது உறுதி என்றே சொல்கிறார்கள். சொல்லப் போனால், விஜய் நடித்த போக்கிரி தெலுங்கிலிருந்தும், காவலன் மலையாளத்திலிருந்தும் தமிழுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

வெள்ளி 11 ஜுன் 2021