மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

ஜெய் சொன்னது நிஜம்தான்.. அடுத்தடுத்து வந்த தகவல்கள்!

ஜெய் சொன்னது நிஜம்தான்.. அடுத்தடுத்து வந்த தகவல்கள்!

நடிகர் ஜெய்க்கு திரையரங்கில் இறுதியாக வெளியான படம் கேப்மாரி. இந்தப் படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்தப் படம் பெரிதாக செல்ஃப் எடுக்கவில்லை. இப்போதைக்கு எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி மற்றும் குற்றமே குற்றம் படங்கள் கைவசம் இருக்கிறது.

சோலோ ஹீரோவாக எக்கச்சக்கப் படங்கள் கொடுத்திருந்தாலும் மல்டி ஹீரோக்களுடன் இவர் கொடுத்தப் படங்களெல்லாம் ஹிட்டாகியிருக்கிறது. சான்றாக, சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சென்னை 28 II, கலகலப்பு 2 என மற்ற ஹீரோக்களுடன் இணைந்து ஜெய் நடித்த எல்லா படமும் பெரிய ரீச். ஆனால், சோலோ ஹீரோவாக அவரின் படங்களின் வசூலில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.

நடிகராக இருந்தவர் சமீப காலமாக இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கும் ‘சிவ சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக இருப்பதாகச் சென்ற வருடம் அறிவிப்பு வெளியானது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வேகமாகப் பரவியது. சுந்தர்.சி தயாரிக்கும் இப்படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜெய் படங்கள் குறித்த இன்னொரு சுவாரஸ்ய அப்டேட்டும் கசிந்துள்ளது.

இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர் படமொன்றை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தை அட்லீ தயாரிக்க இருக்கிறாராம். அதில் வில்லனாக நடிக்க ஜெய்யிடம் அட்லீ பேசியதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, ஜெய்க்கு ‘ராஜா ராணி’ எனும் பெரிய ஹிட்டைக் கொடுத்தவர் அட்லீ. அதனால், நிச்சயம் நடிப்பார் என்கிறது நெருங்கிய வட்டாரம்.

சமீபத்தில் ஜெய் நடித்து ஹாட்ஸ்டாரில் `ட்ரிப்பிள்ஸ்' எனும் வெப் சீரிஸ் வெளியானது. அப்போது, அவர் கொடுத்தப் பேட்டியில் "எனக்கு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்கள் பண்ண விருப்பம் இருக்கிறது. என்னோட அடுத்து வரும் சில படங்களில் வில்லனா நடிக்கிறதுக்கான பேச்சுகளும் போயிட்டிருக்கு"என்று கூறியிருந்தார். தொடர்ச்சியாக, வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் ஜெய்யை தேடி வருகிறதாம். அதனால், பேட்டியில் ஜெய் சொன்னத் தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வெள்ளி 11 ஜுன் 2021