மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

பிரபுதேவாவின் 50வது படத்துக்கு கிடைத்த தீர்வு !

பிரபுதேவாவின் 50வது படத்துக்கு கிடைத்த தீர்வு !

ஒரு படத்தை எடுப்பதைக் காட்டிலும் கடினமானது படத்தை ரிலீஸ் செய்வது தான். தமிழ் சினிமாவில் முழுமையாக முடிந்து தயார் நிலையில் நூற்றுக்கணக்கானப் படங்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமானப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. இப்போதைக்கு ரிலீஸ் என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கூடுதல் சிக்கலாக, கொரோனாவும் சேர்ந்து கொண்டதால் திரையரங்குகளும் இல்லை. அதனால், பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸே கேள்விக்குறியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு இப்போதைய ஒட்டுமொத்த நம்பிக்கை ஓடிடி தளங்களே. தமிழில் மொத்தமாக இருக்கும் நான்கைந்து ஓடிடி தளங்களும் தேர்ந்தெடுத்தே படங்களை வாங்கிவருகிறது. அதனால், ஒரு சில படங்களுக்கு மட்டுமே ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில், நீண்ட நாளாக தயாராகி கிடப்பில் இருக்கும் படங்களும் ஓடிடி ரிலீஸை முயற்சி செய்துவருகின்றன. அப்படியான ஒரு படம் ‘பொன் மாணிக்கவேல்’.

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. இந்தப் படம் முழுமையாகத் தயாராகி சில வருடங்களாகிவிட்டது. நிதிப் பிரச்சினையினால் படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில், எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்து சென்ற வருடப் பொங்கலுக்குப் படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டுவர இருந்தார்கள். அதுவும் நடக்கவில்லை.

பிரபுதேவாவின் 50வது படமென்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு, ஒரு நடிகரின் 50வது, 100வது படங்கள் எந்த சிக்கலும் இன்றி வெளியாக வேண்டுமென விரும்புவார்கள். ஆனால், பொன் மாணிக்கவேல் ரிலீஸாகாதது பிரபுதேவாவுக்கு பெரும் சோகத்தையே கொடுத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாக இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. தமிழில் புதிதாகக் களமிறங்க இருக்கும் சோனி லிவ் ஓடிடி தளமானது பொன்மாணிக்கவேல் படத்தை வாங்குவதற்கு 90% சம்மதம் தெரிவித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாம்.

50வது படமென்பதால் திரையரங்க வெளியீட்டை எதிர்பார்த்தார் நடிகர் பிரபுதேவா. இப்போதைக்கு ரிலீஸானால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் படக்குழுவினர். படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார். இவருடன் நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 11 ஜுன் 2021