மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

விஜய்யைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களையும் சர்ப்ரைஸ் செய்த யோகிபாபு

விஜய்யைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களையும் சர்ப்ரைஸ் செய்த யோகிபாபு

டிரெண்டுக்கு ஏற்ப ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காமெடி நடிகர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். திடீரென உச்சத்துக்கு வருவார்கள். ஒரே நேரத்தில் டஜன் கணக்கில் படங்கள் நடிப்பார்கள். அப்படியே காணாமல் போய்விடுவார்கள். அப்போது, அடுத்த காமெடி ஹீரோ வந்திருப்பார். இப்போதைக்கு, லேட்டஸ்ட் சென்சேஷன் யோகிபாபு. உச்ச நடிகர்களின் படத்தில் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறார். ரஜினியில் தொடங்கி அனைத்து நடிகர்களின் படத்திலும் காமெடியனாக செம பிஸி.

ஹீரோக்களை விட அதிகமாகப் படங்களை கையில் வைத்திருக்கிறார் யோகிபாபு. படங்களில் பிஸியாக நடித்துவருவது மட்டுமல்லாமல், அவ்வப்போது ட்விட்டரிலும் தென்படுகிறார். ரசிகர்கள் ஏதேனும் கேள்விக் கேட்டால் பதிலளிக்கிறார். அப்படி, சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருந்தார். என்னவென்றால், விஜய் 65 படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் என பதில் கூறியிருந்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஜய் 65’. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் படம் உருவாகிவருகிறது. ஜார்ஜியாவில் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு, சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கிறது. இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், விஜய் படத்தில் யோகிபாபு நடிப்பது உறுதியானது. யோகிபாபு சொன்ன இந்த தகவல் இணையத்தில் விஜய் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டது.

விஜய் படத்தின் அப்டேட் மட்டும் சொன்னால் போதுமா? அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா !? அஜித் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி கேட்ட, அதற்கும் ‘யெஸ்ப்பா’ என பதிலளித்து வலிமையில் அஜித்துடன் நடிப்பதையும் உறுதி செய்தார். இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். அஜித்துடன் காலா நாயகி ஹூமா குரேஷி நடித்துவருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். படம் முழுமையாக முடிந்துவிட்டது. வெளிநாட்டு ஷெட்யூல் மட்டுமே மீதமிருக்கிறது. இந்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

அஜித், விஜய் படங்களில் யோகிபாபு நடிப்பதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களில் நடித்த யோகிபாபு, நான்காவது முறையாக வலிமை படத்தில் இணைந்து நடிக்கிறார். அதுபோல, மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் யோகிபாபு.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 10 ஜுன் 2021