மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ஜெகமே தந்திரம் டிவி ஒளிபரப்பு எப்போது ?

ஜெகமே தந்திரம் டிவி ஒளிபரப்பு எப்போது ?

தனுஷ் படங்களின் ரிலீஸ் என்றாலே இணையத்தில் ஒரு பரபரப்பு நிலவுகிறது. ஏனெனில், தனுஷ் தேர்ந்தெடுக்கும் கதைகளின் மீதான ரசிகர்களின் நம்பிக்கையே அதற்கு காரணம். அப்படி, கர்ணன் படத்துக்குப் பிறகு, தனுஷூக்கு அடுத்த ரிலீஸ் ஜெகமே தந்திரம்.

ரஜினி நடிக்க பேட்ட படத்துக்குப் பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெகமே தந்திரம். சொல்லப் போனால், பேட்ட படத்துக்கு முன்னாடியே உருவாகியிருக்க வேண்டியது. தனுஷ் படத்தில் ஒப்பந்தமான நேரத்தில் தான் ரஜினிக்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்காக தனுஷ் படத்தை தள்ளிவைத்தார்கள். அப்படி, முதலில் பேட்ட உருவானது.

பேட்ட படத்தில் வரும் பேட்ட வேலன் கேரக்டரின் அடுத்த வெர்ஷனாக தான் ஜெகமே தந்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் சுருளி கேரக்டர் இருக்கும் என்கிறார் கார்த்திக் சுப்பராஜ். தனுஷூடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் வெளியானது. சொல்லப்போனால் புஜ்ஜி மற்றும் நேத்து பாடல்கள் படத்தில் இடம்பெறாது. படத்தின் புரோமோஷனுக்காக உருவான பாடல்கள்.

இப்படம் திரையரங்குக்காகத் தயாராகி, ஓடிடிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜூன் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. ஓடிடியில் வெளியான ஒரு மாதத்துக்குப் பிறகு நேரடியாக டிவியிலும் ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். கூடுதல் தகவல் என்னவென்றால், ஓடிடியில் வெளியாகும் வெர்ஷனில் பாடல்கள் இடம்பெறாது. ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது படத்தினுள் பாடல்கள் இடம்பெறும் என்கிறார்கள்.

பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் , சாரா அலிகானுடன் நடித்திருக்கும் ‘அட்ராங்கி ரே’ படமும் தனுஷூக்கு இந்த வருடம் வெளியாகிவிடும். அதோடு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43, செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’, மாரி படத்தைக் கொடுத்த பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு சின்ன பட்ஜெட் படம், மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவை லைன் அப்பில் இருக்கிறது. இதற்கிடையே, வெற்றிமாறன் மற்றும் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் படங்களில் நடிக்கவும் தனுஷ் வாக்கு கொடுத்திருக்கிறார்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 10 ஜுன் 2021