மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

கோவிட் பரிதாபங்கள்

கோவிட்  பரிதாபங்கள்

ச ப் பா ணி

பிரபலத்தின் வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொள்ள நினைக்கிறவன் மனுசன்

அவன் என்ன செண்ட் போட்டிருக்கானு தெரிந்து கொள்ள ஆசைப்படுபவன் பெரிய மனுசன்

தர்மஅடி தர்மலிங்கம்

நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்: ப.சிதம்பரம்!

கொரோனா மாதிரி மக்களையும் 'உருமாற' வெச்சிட்டாங்களே.?!

நாகராஜசோழன்.MA.MLA.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரச முழு முயற்சி எடுத்திட வேண்டும். முருகன் பிஜேபி.

மொதல்ல கர்நாடக அரசை நீதிமன்றம் சொன்ன அளவு காவிரி தண்ணியை தமிழ்நாட்டுக்கு குடுக்க சொல்லுங்க சார்...

ச ப் பா ணி

12ம் வகுப்பில் All pass பார்த்த முதல் தலைமுறை நாம் தான்

தர்மஅடி தர்மலிங்கம்

“நம்முடைய தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்திகளை பரப்ப வேண்டாம்” - பிரதமர் மோடி!

கோமியம் குடிச்சா கொரோனா வராதுன்னு சொல்றவங்களுக்கு நல்லா கேட்கிற மாதிரி சொல்லுங்க ஜீ.

மயக்குநன்

கட்சியை அழிக்க விடமாட்டேன்!- சசிகலா.

அதுக்கு... மொதல்ல கட்சியை உங்ககிட்ட அளிக்கணுமே தாயீ..?!

ஷேக்பரித்

அத்தியாவசிய தேவைக்காக பக்கத்து ஊர் போறதுக்கு கூட ஈ'பாஸ் தர மாட்ராங்க பா.

அத்தியாவசிய தேவையா என்னா ஊருக்கு போகனும்.

பாண்டிச்சேரிக்கு..

கோழியின் கிறுக்கல்!!

நம்ம ஊர்ல வண்டி ஓட்டுவதற்கு Right sideல் வருபவரை பார்ப்பதை விட, Wrong sideல் வருபவரை அதிக கவனத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது!!

Lakshmanasamy Odiyen Rangasamy

வேட்டை சமூகமாக இருந்த போது குலக்குறிகளின் பெயரால் குழந்தைகள் அழைக்கபட்டது

அதன் பிறகு தன் குழந்தைகளுக்கு

தங்கள் பெற்றோர்கள் அல்லது பாட்டன் பாட்டிகள் பெயரை வைப்பது வழக்கமாக ஆனது

அதன்பிறகு தங்களது குலதெய்வங்களின் பெயரை வைப்பது வழக்கமாக ஆனது.

அதன் பிறகு நாள் நட்சத்திரம் பார்த்து உயிரெழுத்திலோ உயிர் மெய்யெழுத்திலோ தொடங்கும் பெயரை வைத்துக்கொள்வது வழக்கமானது

அதன் பிறகு தனக்கு பிடித்த தலைவர்களின் பெயரை வைத்துக்கொள்வது வழக்கமானது

அதன்பிறகு அவர்களை வசீகரித்த கொள்கைகளின் பெயரை வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்

இந்த மாற்றங்களை ஆரம்பித்து வைத்ததில் திராவிடர் கழகத்துக்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் மகத்தான பங்கு இருக்கிறது

ரஷ்யா என்று ஒரு பெண் குழந்தைக்கு பெயர்வைத்தார் பெரியார்.

லெனினா என்று ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைத்தார் பாலன்

தந்தை பெரியார் என்றே மகஇக தோழர் ஒருவர் தன் பெண்குழந்தைக்கு பெயரிட்டார்

நாத்தீகம் என்று தன் குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார் ஒரு நண்பர்

நக்சல்பரி என்று தன் மகளுக்கு பெயர் சூட்டியிருக்கிறார் மார்க்வாதி

கியூபா என்று தன் பெண்குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார் தோழர் வில்வம்

தோழர் ஒருவர் தன் மகனுக்கு அம்பேத் என்று பெயர் வைத்திருக்கிறார்

வகுப்புத் தோழி ஒருவர் தன் மகளுக்கு சாவித்திரிபாய்புலே என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

வழக்கறிஞர் Anand Muthiahதன் மகனுக்கு CASTELESS என்று பெயரிட்டிருக்கிறார்

பெயர்சூட்டலின் ஏறுமுகத்தை வைத்து சமூக வளர்சியை அடையாளம் காணும் ஆய்வுமுறையொன்றை யாரேனும் தொடங்கினால் சுவராசியங்கள் கூடலாம்.

இதோ இங்கே சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மோகன் அவர்களின் மூன்றாவது மகன் சோசலிசத்தின் திருமண அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.

ஆச்சரியமாக அவரது முதல் மகன் பெயர் கம்யூனிசம்.

இரண்டாவது மகனின் பெயர்

லெனினிசம்.

கூடுதல் ஆச்சரியம் என்னவெனில்

பேரனின் பெயர்..மார்க்சிசம்

ஆச்சரியத்துக்கெல்லாம் ஆச்சரியம் என்னவெனில் மணகள் பெயர் மம்தா பேனர்ஜி.. காங்ரஸ் குடும்பமா இருக்குமோ

-லாக் ஆஃப்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 9 ஜுன் 2021