மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

விக்ரம் பெரிதும் நம்பும் படம்... காரணம் இதுதான்!

விக்ரம் பெரிதும் நம்பும் படம்... காரணம் இதுதான்!

மிகப்பெரிய ஹிட் ஒன்றுக்காக நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார் விக்ரம். ஏனெனில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட்டைக் கொடுக்கவில்லை. இறுதியாக, 2005இல் அந்நியன், 2011இல் தெய்வத் திருமகள் படங்கள் கொடுத்த மாதிரியான ஒரு ஹிட் இன்னும் விக்ரமுக்கு அமையவில்லை. தற்போது இரண்டு படங்களை விக்ரம் பெரிதும் நம்பியிருக்கிறார். அதில் ஒன்று, சியான் 60.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘சியான் 60’. பாபிசிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விஜய் நடித்த மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 2021க்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் படம் பற்றிய சில முக்கிய அப்டேட்டுகளை கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் காட்சிகள் 50 சதவிகிதம் படமாக்கப்பட்டு விட்டதாம். தமிழ்நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் படத்தின் பணிகளை உடனடியாக திரும்ப தொடங்க திட்டமாம். எப்படியும், 2022 தொடக்கத்தில் படம் உறுதியாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ரிவெஞ்ச் டிராமாவா படம் உருவாகி வருகிறது. படத்தில் இசையமைக்க முதலில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு, அவருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டார். படமும் பாதி கிணறு தாண்டிவிட்டது. விரைவிலேயே பட டிரெய்லர் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

விக்ரமின் கைவசம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய்ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படங்கள் கைவசம் இருக்கின்றன. இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதோடு, நீண்ட நாட்களாக கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் வெளியாகாமல் வெயிட்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

புதன் 9 ஜுன் 2021