மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

மிஷ்கினின் பிசாசு 2-வில் விஜய்சேதுபதி.. என்ன ரோல் ?

மிஷ்கினின் பிசாசு 2-வில் விஜய்சேதுபதி.. என்ன ரோல் ?

வித்தியாசமான கோணத்தில் கதைகளை அணுகி, ரசிகர்களுக்கு புது அனுபவத்தை திரையில் தரும் இயக்குநர் மிஷ்கின். இவரின் இயக்கத்தில் உதயநிதி நடிக்க ‘சைக்கோ ’ வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

சைக்கோ வெற்றியைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்கினார் மிஷ்கின். அதற்கான படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். அந்த ஷூட்டிங்கில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட, படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்.

துப்பறிவாளன் 2 போனால் என்ன, பிசாசு 2வை துவங்கலாம் என திட்டமிட்டு படத்தையும் துவங்கினார். நாயகியாக ஆண்ட்ரியா நடித்துவருகிறார். இவருடன், பூர்ணிமா, பிசாசு ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்துவருகிறார்கள். இந்தப் படத்துக்கு இசை கார்த்திக் ராஜா.

முந்தைய படமான சைக்கோவில் இசை இளையராஜா. பிறகு, எப்படி கார்த்திக் ராஜா என யோசிக்கலாம். சைக்கோ படத்துக்காக பணியாற்றும் போது, இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுடன் நெருங்கிய நட்பாகியிருக்கிறார் மிஷ்கின். கார்த்திக்கின் இசை மீதான பார்வை, மிஷ்கினுடன் ஒத்துப் போக பிசாசு 2விற்கு இசையமைப்பாளரானார். படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்தும் கொடுத்துவிட்டாராம்.

இந்தப் படத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் பகுதிகளில் நடந்து வருகிறது. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக படத்தில் ஆண்ட்ரியா நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க விஜய்சேதுபதியிடம் ஏற்கெனவே கேட்டிருந்தார் மிஷ்கின். தமிழ், தெலுங்கு, மலையாளம் & இந்தி மொழிகளில் என அடுத்தடுத்துப் படங்களில் பிஸியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. அதனால், தேதி ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதால் அவர் நடிப்பது உறுதியாகாமல் இருந்தது.

இந்நிலையில், மிஷ்கினுக்காக விஜய்சேதுபதி அந்த ரோலில் நடிப்பார் என்றே சொல்லப்படுகிறது. படத்தில் பேய் ஓட்டுபவராக விஜய்சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருவார் என்று கூறப்படுகிறது.

- தீரன்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

செவ்வாய் 8 ஜுன் 2021