மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

பால் டீயானது: அப்டேட் குமாரு

பால்  டீயானது:  அப்டேட் குமாரு

முழு ஊரடங்குல பால் வாங்கப் போன பக்கத்து வீட்டு அண்ணனோட மோட்டார் பைக்கை போலீஸ் தூக்கிட்டுப் போயிருச்சு. அது எப்படினு இருக்குனு பாக்குறதுக்காக அண்ணன் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காரு. அப்பதான் ஏட்டு அந்த வண்டியில வந்து இறங்கியிருக்காரு. என்னடா நம்ம வண்டி மாதிரி இருக்கேனு அண்ணன் பார்த்திருக்காரு. ஆமா, அவரு வண்டியிலதான் போலீஸ் போய் டீ வாங்கிட்டு வந்திருக்காரு. பால் வாங்கப் போனதுக்காக என் வண்டியை தூக்கிட்டீங்க, இன்னிக்கு அதுல போய் டீ வாங்கிட்டு வாறீங்களேனு அண்ணன் கேட்க.... ஊரடங்குனாலும் உன் வாய் அடங்காதானு கேட்டு, அடுத்த வாரம் வர சொல்லிட்டாங்களாம். நீங்க அப்டேட் பாருங்க

ஜோக்கர்...

திடீர்னு தடுப்பூசி ப்ரீயா தர்றதா சொல்றீங்களே.. என்ன காரணம்?

ஜி ~ என்ன காரணம், அப்போதான் சர்டிபிகேட்ல என் போட்டோ போடுவாங்க. அதான் காரணம்..

amudu

நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளை நீக்க பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம.

பால் பொங்கலாம்.. இப்படி பன்னீர் பொங்கலாமா.?!

மயக்குநன்

தொடர்ந்து 8-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது!- மத்திய அரசு.

அப்புறம் ஏன் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை இன்னமும் கொடுக்காம இழுத்தடிகிறாங்க அண்ணே..?!

ச ப் பா ணி

இந்த உலகத்துல எதை எடுத்தாலும் ஒன்னை விட ஒன்னு அசிங்கமாதான் இருக்கும்

-உதாரணத்துக்கு செல்ஃபி

உள்ளூராட்டக்காரன்

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், போட்டுக்க தடுப்பூசி

மயக்குநன்

தமிழகத்தில் தாமரையை மலரச் செய்த வெற்றிக்கு பின்னால் தன்னலமற்ற தொண்டர்களின் கடின உழைப்பு உள்ளது!- வானதி சீனிவாசன்.

இபிஎஸ்- ஓபிஎஸ்ஸை சொல்றாங்க போல..?!

சித்ரா தேவி

இங்கருந்து நிலாவை பார்த்தா நிலால பாட்டி வடை சுடுறதா தெரியற மாதிரி நிலால இருந்து பார்த்தா இங்க பூமில நம்ம ஜீ வடை சுடுற மாதிரி தெரியுமில்ல ?

ச ப் பா ணி

முட்டைகோஸ் பொரியல் என்பது கருப்பு பேண்ட் மாதிரி...எல்லா சாப்பாட்டுக்கும் மேட்ச் ஆகிரும்...

Mannar & company™

காதலில் விழுந்தவன்..

"காபி ஷாப்"ல

மிங்கிள் ஆகிறான்,

"ஒயின் ஷாப்"ல

சிங்கிள் ஆகிறான்!

"செங்காந்தள்*

தடுப்பூசி போட்ட பிறகு எதிர்ப்பு சக்தி அதிகமாகி இருக்குனு எதை வைத்து சொல்லறிங்க?

நேற்று என் மனைவியை பெயர் சொல்லி கூப்பிட்டேனே!

தர்மஅடி தர்மலிங்கம்

நான் இந்தியாவில் கால் வைத்தால்தான் கொரோனா பெருந்தொற்று ஒழியும்: நித்தியானந்தா

நீங்க போய் கைலசாவில் ஒளிஞ்சிக்கிட்டீங்களே அந்த மாதிரிங்களா..??

balebalu

அமேசான் நிறுவனர் ஜூலை 20ல் விண்வெளிக்கு பயணம் -செய்தி

பறந்து பறந்து டெலிவரி என்பது இதுதானோ ?

தர்மஅடி தர்மலிங்கம்

நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்; செய்தி

ஒருவேளை.. ரத்து செய்யாட்டி தர்மயுத்தம் நடத்துவாரோ

லாக் ஆப்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

செவ்வாய் 8 ஜுன் 2021