மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

ஹாலிவுட் ஷூட்டிங்கில் என்ன நடந்தது?: தனுஷ்

ஹாலிவுட் ஷூட்டிங்கில் என்ன நடந்தது?: தனுஷ்

கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷூக்கு அடுத்த ரிலீஸ் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் படம் உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஜுன் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

கர்ணன் போலவே ஜெகமே தந்திரம் படமும் திரையரங்கில் வெளியாக வேண்டுமென விரும்பினார் தனுஷ். ஆனால், அதற்கான சூழல் அமையாததால் தயாரிப்பு தரப்பு ஓடிடிக்குச் சென்றது. ஏனெனில், படத்தை வெளியிடாமல் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நாளுமே படத்தின் பட்ஜெட் எகிறிக் கொண்டே இருக்கும். திரையரங்கில் படம் வெளியாகாமல் போய்விட்டதால், படம் பற்றிய எந்த அப்டேட்டிலும் பெரிதாக தலையிடாமல் இருந்தார் தனுஷ்.

இந்நிலையில், படம் குறித்த இணைய வழியாக உரையாடல் ட்விட்டர் ஸ்பேஸ்ஸில் நடந்தது. அதில் தனுஷ், கார்த்திக் சுப்பராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ட்விட்டர் உரையாடலில் குறைந்தது 17,000 பேர் கலந்துகொண்டனர். ஒரு இணைய உரையாடலில் இத்தனை பேர் கலந்துகொண்டதெல்லாம் இல்லையாம். அதுவே, மிகப்பெரிய சாதனையாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹாலிவுட் படமான க்ரே மேன் குறித்து சில சுவாரஸ்யங்களையும் தனுஷ் பகிர்ந்துகொண்டார்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ‘க்ரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இருக்கிறார். இந்த படப்பிடிப்புக்காக மனைவி ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்றார் தனுஷ்.

அமெரிக்கா சென்றவுடன் நேராக படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. ஒருமாத காலம் நடிப்புக்கான பயிற்சி கொடுக்கப்பட்டதாம். பயிற்சியை முழுமையாக முடித்ததும் 20 நாட்கள் தனுஷூக்கான காட்சிகளை படமாக்கிமுடித்திருக்கிறார்கள். தனுஷூடன் ஹாலிவுட் நடிகர்களான Ryan Gosling மற்றும் Chris Evans நடித்திருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எப்படியும், இரண்டு வாரங்களுக்குள் சென்னை திரும்புவார் தனுஷ்.

- ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 8 ஜுன் 2021