மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

விஜய் 65 : யோகிபாபு சொன்ன புது அப்டேட்

விஜய் 65 : யோகிபாபு சொன்ன புது அப்டேட்

விஜய், அஜித் ரசிகர்கள் ஆளுக்கொரு பக்கத்தில் சோகத்தில் இருக்கிறார்கள். விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் என்று தெரியாததால் பதட்டத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதுபோல, வலிமை படத்தின் அப்டேட் எப்போது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். தயாரிப்பாளர்களே கூலாக இருந்தாலும், ரசிகர்கள் மட்டும் தான் பொறுப்புடன் இருக்கிறார்கள்.

பொதுவாக, பெரிய ஹீரோஸ் படங்களில் யார் நடிக்கிறார், என்ன கதை, எங்கு படப்பிடிப்பு என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பார்கள். அதை தெரிந்துகொண்டு முதல் ஆளாக அப்டேட் செய்வதிலும் கில்லியாக இருப்பார்கள். அப்படி, விஜய் 65 படம் பற்றிய அப்டேட் ஒன்று விஜய் ரசிகர்களால் தெரிய வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு மாஸ்டர் இந்த வருடம் வெளியானது. விஜய்யுடன் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருந்தார். படமும் செம ரீச். அடுத்தக் கட்டமாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அவர் சொன்ன கதையில் கருத்துவேறுபாடு இருந்ததால் கூட்டணி இணையவில்லை. அதன்பிறகு, விஜய் 65 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் 65 துவங்கியது. முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் துவங்கியது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் துவங்குவதற்குள் லாக்டவுன் வந்துவிட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தவிர, மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், யோகிபாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் யோகிபாபு . அதில், விஜய் 65 படத்தில் நடிக்கிறீர்களா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ‘ஆமாம்’ என பதில் சொல்லி தகவலை உறுதிசெய்துள்ளார்.

விஜய்யுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்கிறார் யோகிபாபு. மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் 65 படத்திலும் யோகிபாபு நடிக்க இருக்கிறார். சரி, படம் எப்போது வெளியாகும் என்று விசாரித்தால்... இந்த வருடம் மாஸ்டர் போல, அடுத்த வருட பொங்கலுக்கு விஜய் 65 வெளியாகும் என்கிறார்கள்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

திங்கள் 7 ஜுன் 2021