மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

சீன மொழியில் ரீமேக்காகும் த்ரிஷ்யம் 2 ; ஆனால், ஒரு கண்டிஷன் !

சீன மொழியில் ரீமேக்காகும் த்ரிஷ்யம் 2 ; ஆனால், ஒரு கண்டிஷன் !

ஒரு மொழியில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் படங்கள் மற்ற பிராந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். ஆனால், த்ரிஷ்யம் கடல்கடந்து மற்ற நாடுகளில் ரீமேக் ஆகி பெரிய சாதனைப் படைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது மட்டுமின்றி சிங்கள மொழியிலும், சீன மொழியிலும் ரீமேக் ஆனது.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியான படம் த்ரிஷ்யம். இந்தப் படம். சீனாவில் Sheep Without a Shepherd எனும் பெயரில் 2019ல் வெளியானது. சீனாவிலும் படம் பெரிய ஹிட்.

தற்பொழுது, த்ரிஷ்யத்தின் இரண்டாம் பாகமானது நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இரண்டாம் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதே உண்மை. அதனால், முதல் பாகம் மாதிரியே, இரண்டாம் பாகத்துக்கான ரீமேக் பணிகளும் துவங்கிவிட்டது. முதல் கட்டமாக, தெலுங்கு வெர்ஷன் படத்துக்கான ரீமேக் துவங்கி போய்க் கொண்டிருக்கிறது. தெலுங்கில், வெங்கடேஷ், மீனா லீட் ரோலில் நடிக்கிறார்கள். படத்துக்கான படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அதோடு, கன்னடம் மற்றும் இந்தி வெர்ஷன் ரீமேக்கும் விரைவில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில், சீன மொழியிலும் த்ரிஷய்ம் 2 ரீமேக் ஆக இருக்கிறதாம். அதற்கான முதல்கட்டப் பணிகள் துவங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். சீன நாட்டு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தான் படத்தின் கதை அமைய வேண்டும். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே விதி. அதனால், முதல் பாகத்தில் நாயகனை போலீஸ் கைது செய்வது போலவே கதையை அமைத்திருப்பார்கள்.

அதன்படி, த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்துக்கான கதையையும் மாற்றியமைத்தே படத்தை உருவாக்க இருக்கிறார்கள். ஆக, இரண்டாம் பாகத்தின் கதை எப்படி அமையப்போகிறது என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

திங்கள் 7 ஜுன் 2021