மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

முடிவுக்கு வரும் இந்தியன் 2 பிரச்சினை!

முடிவுக்கு வரும் இந்தியன் 2 பிரச்சினை!

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நிற்கிறது. அதாவது, சென்ற வருடம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு படப்பிடிப்பு நடக்கவே இல்லை.

லைகா நிறுவனமும் படத்தைத் தொடங்குவது குறித்து பேசவில்லை. கமல்ஹாசனும் தேர்தல் நெருங்கியதால் அரசியல் வேலைகளில் இறங்கினார். ஷங்கர் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என தயாரிப்புத் தரப்பிடம் பல முறை கேட்டும் பதில் இல்லாததால், அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு ஒப்பந்தமானார் ஷங்கர். ஒன்று, ராம்சரண் நடிப்பில் தில்ராஜு தயாரிப்பில் PAN இந்தியா திரைப்படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக். இவ்விரண்டு படங்களையும் உடனடியாகத் தொடங்க திட்டமிட்டார்.

இந்த நேரத்தில், லைகா சுதாரித்துக்கொண்டது. இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, மற்ற படங்களில் கவனம் செலுத்த கூறியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, நீதிமன்றத்தை நாடியது லைகா. இந்தியன் 2-வை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்கும்படி கோரியது தயாரிப்பு நிறுவனம். இந்த வழக்குக்கான தீர்ப்பு இந்த மாதம் வர இருக்கிறது.

ஆனால், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, சிக்கல் தீர்ந்துவிடும் என்றே தெரிகிறது. இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட முடிவெடுத்திருக்கிறாராம் ஷங்கர். ஏனெனில், ராம்சரண் படமும், அந்நியன் இந்தி ரீமேக்கும் தள்ளிப்போகும் சூழல் இருக்கிறதாம். அதனால், லைகாவுக்காக முதலில் இந்தியன் 2 முடித்துவிட சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

எப்படியும், லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இந்தப்படம் முதலில் தொடங்கிவிட்டால் நிச்சயம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம் தள்ளிப்போகும். கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜை ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள சொல்ல வாய்ப்பு இருக்கிறது. விக்ரம் படம் கமிட்டாகி நீண்ட நாளாகக் காத்திருக்கும் லோகேஷுக்கு நிச்சயம் இது ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில், கமல்ஹாசனுக்காக மற்ற சில பட வாய்ப்புகளை வெயிட்டிங்கில் போட்டார் லோகேஷ். இப்போது, இவரையே கமல்ஹாசன் வெயிட்டிங்கில் போட இருக்கிறாராம்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 6 ஜுன் 2021