மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ்?

விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ்?

நடிகர்களின் படங்களைக் கவனிக்கும் ரசிகர்கள், சமீப காலங்களில் இயக்குநர்களையும் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்கள் இயக்கும், தயாரிக்கும் படங்களை முதல் நாள், முதல் காட்சி பார்க்க விரும்புகிறார்கள். அப்படியான ஒரு சில இளம் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர், கார்த்தி நடிக்க கைதி படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தார். படத்தின் பட்ஜெட்டை விட பத்து மடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்தது கைதி. இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய்யை இயக்க தயாரானார். விஜய், விஜய் சேதுபதி என இரண்டு ஹீரோக்களை மோதவிட்டு ‘மாஸ்டர்’ படத்தைக் கொடுத்தார். மாஸ்டரும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்தது.

அடுத்த பாய்ச்சலாக, கமல்ஹாசனை இயக்கத் தயாராகி வருகிறார். கமல்ஹாசன் நடித்துத் தயாரிக்க லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘விக்ரம்’ படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி சூட்டைக் கிளப்பியது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸ் மற்றும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு நிற்கிறது. விஜய் சேதுபதியோ, எக்கச்சக்க படங்களைக் கையில் வைத்திருக்கிறார். எப்படியும், லாக்டவுன் முடிந்ததும் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கும். அப்போது, விஜய் சேதுபதியால் தேதி ஒதுக்க முடிந்தால் விக்ரமில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், கமல் படத்தில் நடிக்க வேண்டுமென ஆசையில் இருக்கிறாராம் சேதுபதி. ஆனால், தேதிகள் ஒத்துவந்தால் சாத்தியமாகும் என்கிறார்கள்.

ஏற்கெனவே மாஸ்டரில், விஜய் சேதுபதிக்கு அட்டகாசமான கதாபாத்திரம் கொடுத்து மிரட்டினார் லோகேஷ். அதனால், விக்ரமிலும் சம்திங் ஸ்பெஷல் நிச்சயம் இருக்கும். இந்த நிலையில், மாஸ்டரில் இருந்து மற்றுமொரு நடிகரையும் விக்ரம் படத்துக்குள் கொண்டுவர விரும்புகிறாராம் லோகேஷ்.

கைதி, மாஸ்டரில் நடித்த அர்ஜுன் தாஸை கமல் படத்திலும் நடிக்க வைக்க இருக்கிறார்களாம். அர்ஜுன் தாஸுக்கு சினிமாவில் அடுத்த கட்ட உயரத்தை விக்ரம் படம் தருமென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

- தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

ஞாயிறு 6 ஜுன் 2021