மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

’சூ’வுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

’சூ’வுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

சிங்கம் சீறி பார்த்திருப்பே... வேட்டையாடி பாத்திருப்பே... கர்ஜனை பண்ணி பார்த்திருப்பே...மிரட்டி பாத்திருப்பே... ஆனா கொரோனாவால படுத்து பாத்திருப்பியா... தனிமைப்படுத்தப்பட்டு பாத்திருப்பியா... ஐயோ பாக்க வச்சிட்டானுங்களே... அடே மனுசங்களா, சிங்கத்துக்கும் கொரோனாவாம்.சிங்கத்தை தனிமைப்படுத்தி வைக்கிறாங்களாம். என்னடா இது சூவுக்கு வந்த சோதனை?

நீங்க அப்டேட் பாருங்க.

மெத்த வீட்டான்

மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் -

தமிழக அரசு அறிவிப்பு #

சும்மாவே கதற விடுவாரு

இப்ப காலில் சலங்கை வேற கட்டியாச்சு

இனி சிதற விட போறாரு !

நாகராஜசோழன்.MA.MLA.

இந்த ஆட்சியின் கீழ் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.பா. சிதம்பரம்.

ரொம்ப பிராங்கா உண்மையை சொல்லிட்டார், இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு சார்...

amudu

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.நாயைக் கண்டால், கல்லைக் காணோம்" என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான், "தடுப்பூசி இருக்கும் போது, நாம் போடப் போகல. நாம் போடப் போகும் போது, தடுப்பூசி இல்லை" என்பது.

சரவணன். ℳ

45 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கணக்கு முடக்கம்: வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு!

அதாவது தொடர்ந்து பொய் பொய்யா சொல்லிக்கிட்டும் பார்வர்ட் பண்ணிக்கிட்டும் இருக்கணும், அப்படித்தானே...?

தர்மஅடி தர்மலிங்கம்

சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி!

அதானே.. அவங்க என்ன குழப்புறது அதிமுக ஏற்கனவே குழப்பத்தில தான இருக்கு!

PrabuG

உபில ஏழு கொரோனா வகையாம்...

இன்னும் மூனு கண்டு பிடிங்கய்யா.

தசாவதாரம்னு அறிவிச்சு பத்து கோயில் கட்டிடலாம்..

மயக்குநன்

ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே கொரோனாவை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறோம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

எல்லா கட்சிகளும் ஆன்லைன்ல தேர்தல் பிரச்சாரம் செஞ்சிருந்தா, இப்படி போராட வேண்டிய அவசியம் வந்திருக்காதே தலைவரே..?!

ச ப் பா ணி

சாக்லெட் சாப்பிட்டால் சொத்தைபல் வரும் என்று அப்பா மகனுக்கும்,

லட்டு சாப்பிட்டால் சுகர் வரும் என்று மகன் அப்பாவுக்கும் கூறுகிறார்கள்

தர்மஅடி தர்மலிங்கம்

"உலகின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடம்" - பிரதமர் மோடி பெருமிதம்!

ஒருவேளை ஜீ 'கொரோனா'வின் வளர்ச்சியை சொல்றாரோ.??

மயக்குநன்

புதுச்சேரி முதல்வரிடம் அமைச்சர்கள் பட்டியலை தருவதில் பாஜக தொடர்ந்து இழுபறி!- செய்தி.

இவங்களுக்கு காங்கிரஸே தேவலைனு புதுவை மக்களை நினைக்க வச்சிருவாங்க போல..?!

கோழியின் கிறுக்கல்!!

Sofaல படுத்து ஏதாவது பிடிச்ச படம் பார்க்கும் போது சொக்கிகிட்டு வரும் தூக்கம்,

சரி தூங்கலாம்னு எழுந்து போய் படுக்கையில் படுத்தால் பறந்து விடும்!!

லாக் ஆஃப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 6 ஜுன் 2021