மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம்!

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம்!

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி, 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வணக்கம் சென்னை படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கியிருந்தார் கிருத்திகா . ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் இன்று தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கிருத்திகா உதயநிதி.

நெட்பிளிகஸில் ‘பாவக் கதைகள்’ என்ற பெயரில் வெளியான அந்தலாஜி படத்தின் ஒரு பகுதியான, சுதா கொங்கரா இயக்கிய ‘தங்கம்’ சீரிஸில் நடித்த காளிதாஸ், கிருத்திகா உதயநிதி படத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து கிருத்திகா தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தை, சாகர் பென்டலாவின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

-பிரியா

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

ஞாயிறு 6 ஜுன் 2021