மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

சீக்ரெட்டை உடைத்த வலிமை பட நடிகை!

சீக்ரெட்டை உடைத்த வலிமை பட நடிகை!

அஜித் ரசிகர்களுக்கு இப்படியான ஓரு அனுபவம் இதற்கு முன்னால் நடந்தது இல்லை என்பதே உண்மை. ஏனெனில், இவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு வலிமை பட ரிலீஸ் தான். இந்தப் படத்தின் டைட்டில் தவிர எந்த வித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இதுவரை படக்குழு கொடுக்கவில்லை. அஜித் பிறந்த தினமான மே 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் உடன் அடுத்தடுத்து அப்டேட் தருகிறோம் என்றது படக்குழு.

நம்பிக்கையுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே. அடுத்து எப்போது அறிவிப்பு வருமென சோகமாகக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இந்த வருடத்துக்குள் வலிமை படம் வர வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டாலும், அட்லீஸ்ட் தீபாவளிக்காவது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வலிமை படத்தில் நடித்துவரும் நடிகை சங்கீதா, அஜித்தின் கெட்டப் பற்றி ஒரு அட்டகாசமான அப்டேட்டை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசும்போது கூறியிருக்கிறார்.

நடிகர் அஜித் இதுவரைக்கும் நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும், 10, 15 வயது வரைக்கும் குறைத்து செம ஸ்மார்ட்டான ரோலில் அஜித்தை வலிமை படத்தில் பார்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இந்த தகவலைக் கேட்டதும் துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அதோடு, வலிமை படத்துக்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்து நடித்திருக்கிறார் என்ற அப்டேட்டையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

- ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

சனி 5 ஜுன் 2021