மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்!

முதல்வருக்கு  சேரன் வேண்டுகோள்!

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்தநாள், தமிழ்நாடு முழுவதும் ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் பல புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதில் ஒரு திட்டமாக, தமிழ் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்றார். இந்தியாவில் வழங்கப்படும் ஞான பீட, சாகித்ய அகடாமி விருதுகள் மற்றும் சர்வதேச அளவிலான விருதுகள் வென்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் வசித்து வரும் மாவட்டம் அல்லது அவர்கள் விரும்பும் இடத்தில் தமிழக அரசு மூலம் வீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரின் அறிவிப்பை தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான சேரன் முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றை ட்விட்டர் மூலம் விடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது,

“திட்டங்கள் சிறப்பு சார்.. எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன்

விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச் சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை தான் இருக்கிறது. வியாபாரம் சாராதது தான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்..

மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்சனைகளில் இருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 5 ஜுன் 2021