மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

தலய தடவ தெரியாதவரு: அப்டேட் குமாரு

தலய தடவ தெரியாதவரு: அப்டேட் குமாரு

எங்க ஊர்ல முடி வெட்டும் தொழிலாளி ஊரடங்கு நேரத்தில் சலூன்கள் மூடி கிடக்கிறதால வீட்டுக்கு வீடு வந்து முடி வெட்டி விட்டு போறாரு. ஆனால் 100 ரூபாய் வாங்குற இடத்துல 50 ரூபாய்தான் வாங்குறாப்ல. டிமாண்ட் நேரத்துல விலைய ஏத்த வேண்டியது தானே னு கேட்டா... மத்தவன்லாம் தலைய தடவுறான்னா தலைய தடவுற நானே எப்படினு சிரிச்சாரு. எவ்வளவு கூட்டத்துல போனாலும் அவருக்கெல்லாம் கொரோனா வராது. நீங்க அப்டேட் பாருங்க.

Mannar & company

மெடிக்கல் ஷாப் வைக்க போறேன்னு சொல்றியே என்ன படிச்சிருக்க..

மெடிக்கல்ல மளிகைக்கடை சாமான்கள் விக்கிற அளவுக்கு படிச்சிருக்கேன்ங்க..

PrabuG

லாக்டவுன்ல இந்த சனி, ஞாயிறு வேற சுகர் வந்தவங்க கையில ஸ்வீட் பாக்ஸ் தந்த மாதிரி..

அனுபவிக்கவும் முடியலை ஒதுக்கி வைக்கவும் முடியலை..

மயக்குநன்

அமைதியான வளர்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம்!- சீனா.

அதான்... உலகத்தையே 'மயான' அமைதியா மாத்திட்டீங்களே..?!

நாகராஜசோழன்.MA.MLA

‘‘கொரோனா சீனா வைரஸ் தான்; 10 ட்ரில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வேண்டும்’’- ட்ரம்ப்

ஜி~

நிறைய அடி வாங்கினது நாங்க தான், நஸ்ட ஈடு மொதல்ல எங்களுக்கு தான் தரணும்...

ச ப் பா ணி

தெளிவாய் எழுதினால் பெயர்.

அதையே கிறுக்கி எழுதினால் கையெழுத்து.

மயக்குநன்

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்!- பிரதமருக்கு அமுல் நிறுவன துணைத் தலைவர் கோரிக்கை.

பீட்டாவுக்கே 'பால் ஊத்த' ஆசைப்படறாங்க போல..?!

தர்மஅடி தர்மலிங்கம்

"கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஆமாமா... இல்லாட்டி கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருக்குன்னு சொல்லி அடுத்த முறை 'ஓட்டு' கேட்டாலும் கேட்பாங்க.!

சாய் பெருமாள்

இந்தியாவில் கொரோனா 2வது அலையை குறைந்த காலத்தில் மோடி தலைமையிலான அரசு கட்டுப்படுத்தி உள்ளது; அமித்ஷா!

சேராதிருப்பது.....

அமித்ஷாவும்.. உண்மையும்.

மயக்குநன்

தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து மாணவர்கள் கவலைப்படக் கூடாது!- மோடி.

டிரீட் வச்சு கொண்டாடணுமோ ஜீ..?!

சரவணன். ℳ

+ 2 பொதுத்தேர்வை நடத்தலாம்.. பெரும்பாலான கட்சிகள் ஆதரவு.

+2 மாணவர்கள் ~ ஏன்யா ஏன், எங்களுக்குன்னே வருவீங்களாய்யா...?

கோழியின் கிறுக்கல்!!

நம் அறிவு கூறுவதற்கும், மனம் கூறுவதற்குமான இடைவெளி குறைவதே பக்குவம் எனப்படுகிறது!!

-லாக் ஆஃப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 5 ஜுன் 2021