மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் மட்டுமல்ல.. சோனி லிவ்வின் புது திட்டம்!

சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் மட்டுமல்ல.. சோனி லிவ்வின் புது திட்டம்!

தமிழ் சினிமா எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த ரிலீஸ் தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜூன் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ‘ஜெகமே தந்திரம்’. கர்ணன் கொடுத்த வெற்றியால், இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா அச்சுறுத்தலால், திரைப்படங்கள் ஓடிடி ரிலீஸ் பக்கம் செல்லத் துவங்கிவிட்டது. அடுத்தடுத்து மிகப்பெரிய நடிகர்களின் படங்களும் ஓடிடிக்கு செல்ல பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

சமீபத்தில், விஜய்சேதுபதி நடிக்க உருவாகிவரும் துக்ளக் தர்பார் படம் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பது உறுதியானது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழில், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 ஆகிய ஐந்து ஓடிடி தளங்களே முன்னணியில் செயல்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் இடம் பிடிக்க முனைப்புடன் பணியாற்றி வருகிறது சோனி லிவ். தமிழில் புதுப் படங்களை நேரடியாக வெளியிட, தொடர்ச்சியாகப் பல படங்களை வாங்கி வருகிறது இந்நிறுவனம். விஜய்சேதுபதியின் விவசாயி, நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண், அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன், வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா நடித்திருக்கும் ராக்கி, அதர்வா நடிப்பில் தள்ளிப் போகாதே மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் உள்ளிட்ட பல படங்கள் சோனி லிவ் ஓடிடிக்குச் செல்கிறது.

டிஜிட்டல் தளமென்பது புதுப் படங்களை மட்டும் கொண்டிருக்காமல், ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்களின் கலெக்‌ஷன்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், அந்த ஓடிடி பெரியளவில் ரீச் ஆகும். அதனால், புதிய திட்டத்துடன் இருக்கிறதாம் சோனி லிவ். டிஜிட்டல் தளங்களில் விற்பனையாகாத ஆனால், ரசிகர்கள் கொண்டாடியத் திரைப்படங்களை வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறது.

முதலாவதாக, ராஜூமுருகன் எழுத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் மெஹந்தி சர்க்கஸ். ஷான் ரோல்டன் இசையில் படத்தின் பாடல்கள் செம ஹிட். படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது சோனி லிவ் ஓடிடி. அடுத்தடுத்து க்ளாசிக் பட வரிசைகளையும் சேகரிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறதாம். பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் சோனி லிவ், தமிழிலும் அழுத்தமாக கால் பதிக்கவே இந்த முன்முயற்சிகள் என்று சொல்லப்படுகிறது.

- தீரன்

.

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

சனி 5 ஜுன் 2021