மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

அனிமேஷன் அவதாரம் எடுத்திருக்கும் சல்மான் கான்

அனிமேஷன் அவதாரம் எடுத்திருக்கும் சல்மான் கான்

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரின், சகோதரர் அபினவ் காஷ்யப். இவரும் பாலிவுட்டில் பெரிய இயக்குநர்தான். இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து 2010ல் ரிலீஸ் ஆன படம் `தபங்'. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்.

பாலிவுட்டில் ஹிட்டான இந்தப் படம் தமிழில் `ஒஸ்தி' எனும் பெயரில் சிம்பு நடிக்க வெளியானது. அதுமாதிரி, தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் `கப்பர்சிங்' என்கிற பெயரிலும் ரீமேக் ஆனது.

முதல் பாகத்தின் ஹிட்டைத் தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியானது. தபங் 2, தபங் 3 என வெளியான எல்லா பாகங்களும் செம ஹிட். தற்பொழுது, தபங் படத்தில் சல்மான் கான் கேரக்டரான சுல்புல் பாண்டேவை மையமாகக் கொண்டு குழந்தைகள் பார்க்கும் விதமாக, அனிமேஷன் சீரிஸாக உருவாகியிருக்கிறது.

ஏற்கெனவே, சிங்கம் படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடித்த பின், அது அனிமேஷன் சீரிஸாக வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேமாதிரி, தபங் படமும் அனிமேஷன் சீரிஸாக உருவாகி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகிறது. இப்போதைக்கு இந்த சீரிஸின் முதல் சீசனாக 16 எப்பிசோடுகள் வெளியாகியிருக்கிறது.

- ஆதினி

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

சனி 5 ஜுன் 2021