மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

வெள்ளை யானை திரையிலா? ஓடிடியிலா?

வெள்ளை யானை திரையிலா? ஓடிடியிலா?

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகிபாபு,ஆத்மியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வெள்ளையானை. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்திருக்கிறார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் ஈ.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி,பவா செல்லதுரை,சாலை ஓரம் ராஜு, பத்திரிகையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் முழுமையாகத் தயாராகி ஒரு வருடம் ஆகிவிட்டது. படத்தை பார்த்த பலரும் மிகவும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் பல முறை படத்தை வெளியிட தயாராகியும் இயலாமல் போனது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது இதற்கிடையில் வெள்ளை யானை படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி பரவத் தொடங்கியுள்ளது

இது சம்பந்தமாகப் படத்தின் இயக்குநர் சுப்ரமணியம் சிவாவிடம் கேட்ட போது, வெள்ளை யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமை சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் விவசாயம் பற்றி பேசப்பட்டிருக்கும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்கிற ஆவல் வெள்ளை யானை படக்குழுவிற்கு உள்ளது. அதனால் தியேட்டரில் வெளியிடவே நாங்கள் இவ்வளவு நாட்களாகக் காத்திருந்தோம்.

தற்போதைய சூழலைப் பார்க்கிறபோது திரையரங்குகள் எப்போது திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியவில்லை. அதனால் ஓடிடியில் படத்தை வெளியிடப் போவதாக வதந்திகள் உலாவத் தொடங்கியிருக்கிறது. இதுவரை எந்த ஓடிடி நிறுவனத்துடனும் ஒப்பந்தமாகவில்லை என்றார்.

படத்தின் தொலைக்காட்சி உரிமை, மற்றும் டிஜிட்டல் உரிமை இரண்டும் சன் தொலைக்காட்சி வாங்கி இருப்பதால் வேறு ஓடிடி நிறுவனங்கள் வெள்ளை யானை படத்தை வாங்க இயலாது. இணையத்தில் வெளியீடு எனத் தயாரிப்பாளர் முடிவெடுக்கும் பட்சத்தில் சன் நெக்ஸ்ட் ல் வெளியாக வாய்ப்பு உள்ளது என்கிறது வெள்ளை யானை படக் குழு.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

சனி 5 ஜுன் 2021