மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ரசிகர்களின் ஆதரவு, வெறுப்பால் பந்தாடப்படும் சமந்தா

ரசிகர்களின் ஆதரவு, வெறுப்பால் பந்தாடப்படும் சமந்தா

பிரைம் வீடியோவில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘ஃபேமிலி மேன்’. இந்த வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் இன்று (ஜூன் 4) வெளியாக இருக்கிறது. இரண்டாவது சீசனில் முக்கிய ரோலில் சமந்தா நடித்திருக்கிறார். இந்த சீசனின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் என்ன கதை?

உளவுத் துறை அதிகாரியாக இருக்கும் நாயகன் மனோஜ் பாஜ்பாய் & டீமின் வேலை என்னவென்றால், இந்தியாவில் குற்றங்கள் நடக்கும் முன்பே கண்டுபிடித்து அதை முறியடிப்பதுதான். குறிப்பாக, தீவிரவாதிகளால் ஏற்படும் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடிப்பார். பரபரக்கும் சீன்களுக்கு நடுவே ஃபேமிலியில் நடக்கும் சிக்கல்கள் என கதை நகரும். முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தி மட்டுமின்றி தமிழிலும் டப்பாகி வெளியானது.

ஃபேமிலி மேன் 2

ஃபேமிலி மேன் 2வின் டிரெய்லர் கடந்த மே 19ஆம் தேதி வெளியானது. இந்த டிரெய்லரில் தமிழ் ஈழப் போராளிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போன்று காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளது. படத்தில் தமிழ்ப் போராளியாக சமந்தா நடித்திருக்கிறார். டிரெய்லரின் ஒரு காட்சியில், ‘எல்லோரையும் சாகக் கொள்ளுவேன்’ என்று வசனம் பேசுகிறார். இந்தக் காட்சிக்கே பெரிதளவு எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சருக்குப் படத்தை தடை செய்யக் கோரி மனு அளித்தனர். அவற்றையெல்லாம் மீறி, இரண்டாவது சீசன் நாளை வெளியாக இருக்கிறது.

ஷேம் ஆன் யூ சமந்தா

ட்விட்டரில் சமந்தாவை தமிழ் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். Shameonyousamantha எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் வெளியானால் சமந்தாவைப் புறக்கணிப்போம் என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

வி லவ் சமந்தா

சமந்தாவுக்கு எதிராக ட்விட்டரில் எதிர்ப்பலைகள் கிளம்பியிருக்கும் சூழலில், அவருக்கு ஆதரவாகவும் பலர் களத்தில் இறங்கியுள்ளனர். #WeLoveSamantha எனும் ஹேஷ் டேக்கினை டிரெண்ட் செய்து வருகிறார்கள். ‘யார் உசத்தின்னு அடிச்சுக் காட்டுங்க’ மொமண்டில் இரண்டு தரப்பினரும் சண்டையிட்டு வருகிறார்கள். இத்தனை களேபரம் நடந்துவரும் போதிலும், இதுகுறித்து எந்தக் கருத்தும் சமந்தா கூறவில்லை.

சமந்தா கருத்து தெரிவிக்காததற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். நாம் ஏதாவது சொல்லப் போக, அதுவே மிகப்பெரிய பிரச்னையாகிவிடக் கூடாது என்பதால் எந்த கருத்தும் சொல்ல வேண்டாமென படக்குழு கூறியிருக்கிறதாம். அதோடு, முதன்முறையாக ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் சமந்தா. ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பதற்றத்தில் இருக்கிறாராம் சமந்தா. அதற்குள், வெப் சீரிஸில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். ‘அட, பொறுங்கப்பா... நானே தவழ்ந்துட்டு இருக்கேன்’ எதுவாக இருந்தாலும் ஃபேமிலி மேன் 2 ரிசல்டுக்குப் பிறகுதான் என்கிறாராம் சமந்தா.

இந்தப் படத்துக்கு தமிழில் வரவேற்பு இருக்கிறதா, இல்லை எதிர்ப்பலை கிளம்புகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.

- ஆதினி

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வெள்ளி 4 ஜுன் 2021