மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

கொஸ்டின் பேப்பரே பரவாயில்லை: அப்டேட் குமாரு

கொஸ்டின் பேப்பரே பரவாயில்லை:  அப்டேட் குமாரு

பிளஸ் டு படிக்கிற பொண்ணு எதிர்வீட்ல இருக்கு. வாட்ஸப் ஸ்டேட்டஸ்ல அது வச்சிருந்த விஷயம் என்ன தெரியுமா? 'நடத்துறதுன்னா நடத்துங்க.... இல்லேன்னா விடுங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆலோசனைய நடத்தி அந்த நியூஸ நாங்க பாக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. கொஸ்டின் பேப்பரை கூட தாங்கிக்கலாம் போலிருக்கு. இந்த குழப்பத்தை தாங்கமுடியலை'னு போட்டு வச்சிருக்கு.

நீங்க அப்டேட் பாருங்க....

Delta Tamilian

முன்பு அதிகமாக உண்மை பேசினால் “ஆமா இவரு அரிச்சந்திரன் பக்கத்து வீடு”என்பது போல,

இப்போது அதிகமாக பொய் பேசினால்”என்னாடா மோடிக்கு பக்கத்து வீடு மாதிரி பேசுற” என்கிற உவமைகள் அதிகமாக மக்களின் பேச்சு வழக்கில் அதிகம் காண முடிகிறது.

amudu

மகாராஷ்டிராவில் பரோலில் விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள்.

கொரோனா சமூகத்திலிருந்து, சமூக இடைவெளியோடு உள்ளேயே இருப்போம்ன்னு இப்படி முடிவு பண்ணிட்டீங்களேப்பா.

நாகராஜசோழன்.MA.MLA

குடிகாரர்கள் ~

நாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம்! அரசுக்கு வருமானம் தானே கொடுத்தோம், ஆனாலும் நம்மை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிரார்கள்...

கோழியின் கிறுக்கல்!!

விடுதி உணவை உண்டு பழகியவருக்கு,

வீட்டு உணவைக் குறை கூறவதற்கான காரணங்கள் வெகுவாக குறைந்து விடுகின்றன!!

நாகராஜசோழன்.MA.MLA

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை முந்தியது பங்களாதேஷ் - செய்தி.

இதுவே கடன் வாங்கிட்டு கட்டாம நாட்டை விட்டு ஓடி போனவங்க லிஸ்ட் எடுத்த நீங்க தாங்க மாட்டீங்க, ரொம்ப உக்கிரமா இருக்கும்...

mohanram.ko

பகல்ல தூங்கிட்டு, நைட் தூக்கத்தை வா, வா னு சொன்னா எப்படி உடனே வரும்? பொறுமையா தான் வரும்...

எம்புட்டு பொறுமையா அய்யா, மணி 2 ஆகப் போகுதுய்யா

balebalu

அமைதியான வளர்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம் - சீனா

கண்ணு க்கு தெரியாத வைரசை சத்தமில்லாமல் வளர்த்து விட்டபோதே நாங்க புரிஞ்சிக்கிட்டோம்

ச ப் பா ணி

கேட்குதா..கேட்குதா என்பது மட்டும் அதிகம் கேட்கும்

ஆன்லைன் வகுப்புகளில்

மயக்குநன்

அமைதியான வளர்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம்!- சீனா.

அதான்... உலகத்தையே 'மயான' அமைதியா மாத்திட்டீங்களே..?!

தர்மஅடி தர்மலிங்கம்

18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்க கூடாது? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

GST வரியை விலக்கு அளித்தால் கூட போதும், அவங்க இலவசமாக வழங்காட்டா கூட பரவாயில்லைங்க எசமான்!

உள்ளூராட்டக்காரன்

ஊர் பக்கம் Jioவுக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கை நடுங்குற வியாதி வேற இருக்கு போல

மயக்குநன்

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கோரிக்கைக்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்!- ராகுல் காந்தி.

மக்கள் குரல், 'மனதின் குரலுக்கு' கேட்கணுமே ஜீ..?!

சரவணன். ℳ

மத்திய அரசை மத்திய அரசு

என்றே அழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!

அதே மாதிரி ஒன்றிய அரசை, ஒன்றிய அரசுன்னு தானே கூப்பிடுவாங்க...

கோழியின் கிறுக்கல்!

கொரோனா காலங்களில் புதிதாக அறிமுகம் ஆகும் நபரை குரலை வைத்தே அடையாளம் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!!

-லாக் ஆஃப்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

வெள்ளி 4 ஜுன் 2021