மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

ரிலீஸுக்குத் தயாராகும் ஹிட் படங்களின் அடுத்த பார்ட்!

ரிலீஸுக்குத் தயாராகும் ஹிட் படங்களின் அடுத்த பார்ட்!

ஒரு படம் பெரிய ஹிட்டாகிவிட்டால் அந்தப் படத்தின் அடுத்தடுத்தப் பாகங்கள் வெளியாவது வழக்கம். ஹாலிவுட் படங்களில் சொல்லவே வேண்டாம். புதுப்புது பார்ட்டாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருப்பார்கள். அப்படி, பெரிய ஹிட்டான இரண்டு படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டன.

மிரட்டும் நிஜப் பேய்

ஹாலிவுட் ஹாரர் படங்களின் வரிசையில் பிரபலமானது கான்ஜூரிங் சீரிஸ். தி நன், அனபெல்லே படங்கள்கூட, கான்ஜூரிங் படங்களின் கிளைக்கதைகளே. எத்தனையோ ஹாரர் படங்கள் ஹாலிவுட்டில் இதுவரை வந்திருந்தாலும் ஈவில் டெட் படங்களுக்குப் பிறகு உலகளவில் கவனமீர்த்தது இந்த கான்ஜூரிங் சீரிஸ்தான். மக்கள் பெரிதும் விரும்ப காரணமும் இருக்கிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே படங்களின் கதைகள் உருவாக்கப்படுவதால், பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படங்கள் ஏற்படுத்துகிறது. தற்போது, கான்ஜூரிங் படத்தின் 3ஆவது பாகமான THE CONJURING: THE DEVIL MADE ME DO IT எனும் படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

1981இல் அர்ன் ஜான்சன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது கான்ஜூரிங் 3. இந்தப் படத்தின் இறுதி டிரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

சிரிப்புப் பேய்

சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் தயாரிப்பில் வெளியான அனிமேஷன் படங்களில் ஹோட்டல் டிரான்ஸ்லவேனியா படங்கள் செம ஃபேமஸ். இதுவும் ஒரு பேய் படம்தான். ஆனால், சிரிப்புப் பேய்.

2012இல் முதல் பாகம் வெளியானது. தொடர்ந்து 2015, 2018இல் அடுத்தடுத்த பாகங்கள் வெளியானது. எல்லா பாகங்களுமே செம ஹிட். மனிதர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக ஆடிப்பாடி கொண்டாடும் டிராகுலாக்களின் அட்டகாசமே கதை.

டிராகுலா நாயகியும் மனிதகுல நாயகனும் காதலித்து திருமணம் செய்கிறார்கள். அழகான டிராகுலா குழந்தையும் பெற்றெடுக்கிறார்கள். அதற்குள் நடக்கும் காமெடி அதகளமே படம். இந்தப் படத்தின் நான்காவது பாகம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. இது வருகிற ஜூலை 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 3 ஜுன் 2021