மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

சிம்புவுக்காக வேலையைத் துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்புவுக்காக வேலையைத் துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

நடிப்புப் பாய்ச்சலில் இருக்கிறார் சிம்பு. இந்த வருடத்தின் துவக்கத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படம் பெரிதாக வரவேற்பு பெறாவிட்டாலும், சிம்புவுக்கு தனிப்பட்ட முறையில் வெற்றிப் படமே.

சிம்புவுக்கு அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு தயாராகி வருகிறது. அரசியல் சார்ந்த கதைக்களம். அதற்குள் புதுமையான கான்செப்ட் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. படமும் முழுமையாக முடிந்து, ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் படம் `பத்து தல`. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்க வெளியான முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்துதல. படத்தில் கேங்க்ஸ்டராக சிம்பு நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக இன்னொரு லீடாக கெளதம் கார்த்திக் நடித்திருக்கிறார். படத்தை ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பத்து தல ஷூட்டிங் எப்போது துவங்கும் என விசாரித்தால், கொரோனா இரண்டாம் அலை முடிந்து அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு துவங்கிவிடும். எப்படியும் படப்பிடிப்புக்கு இரண்டு மாதங்கள் ஆகலாம். அதுவரை சும்மா இருக்க வேண்டாமென இசைப் பணியை படக்குழு துவங்கியிருக்கிறது.

புதிய தகவல் என்னவென்றால், படத்துக்கான இரண்டு பாடல்களை முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். படப்பிடிப்புக்கு முன்பே முழு பாடல் பணிகளையும் முடித்துவிட திட்டமாம்.

பொதுவாக, சிம்பு -ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் உறுதியாக ஹிட்டாகும். அதுமாதிரி, 10 வருடங்களுக்குப் பிறகு ஜில்லுனு ஒரு காதல் கூட்டணியான கிருஷ்ணா - ஏ.ஆர்.ரஹ்மான் இணைவதால் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 3 ஜுன் 2021