மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

மீண்டும் ரஜினியை இயக்கும் தனுஷ் பட இயக்குநர்!

மீண்டும் ரஜினியை இயக்கும் தனுஷ் பட இயக்குநர்!

பெரும்பாலான தமிழின் இளம் இயக்குநர்களின் மிகப்பெரிய கனவு என்றால், நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதாக இருக்கும். எல்லா இயக்குநர்களுக்கும் இந்த வாய்ப்பு கைகூடுவதில்லை. உச்ச நடிகராக ரஜினி வலம் வரத் துவங்கியதிலிருந்து பெரும்பாலும் வெற்றிப் பெற்ற மூத்த இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்துவந்தார். சமீப காலங்களில் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துவருகிறார்.

காலா, கபாலி என பா.ரஞ்சித்துக்கு வாய்ப்புக் கொடுத்தவர், பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜூக்கு வாய்ப்புக் கொடுத்தார். தற்பொழுது, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துவருகிறார். ரஜினியின் குட் புக் பட்டியலில் எக்கச்சக்க இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். பல இளம் இயக்குநர்களை சந்திக்கும் போதெல்லாம், ‘எனக்காக ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்று கூறியிருக்கிறார் ரஜினி.

அப்படி, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, ரஜினியின் அடுத்தப் படத்தின் இயக்குநர் யாரென்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில், ரஜினியை அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

2019ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், மாளவிகா மோகனன் மற்றும் நவாசுதீன் நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. ரஜினி ரசிகர்களுக்காகவே, ஒரு ரஜினி ரசிகன் எடுத்தப் படமாக இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்பொழுது, விக்ரம் - துருவ் விக்ரம் நடிப்பில் ‘சியான் 60’ படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தை முடித்த கையோடு, ரஜினி படத்தின் பணிகளை துவங்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியானது, ரஜினியை இயக்கும் வாய்ப்பை மேலும் பலப்படுத்தும் என்கிறார்கள்.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பது ரஜினிக்கு ஏதுவாக இருப்பதால், அண்ணாத்த தொடர்ந்து, மீண்டும் சன் தயாரிப்பில் இந்த கூட்டணி கைகூடும் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 3 ஜுன் 2021