மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

மூடப்படுகிறதா தேவி தியேட்டர்?

மூடப்படுகிறதா தேவி தியேட்டர்?

கொரோனா பெருந்தோற்று காரணமாக திரையுலகில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் திரைகளின் எண்ணிக்கை 1100. இவற்றில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய். பிற தொழில்கள் போன்று திரையரங்க தொழில் இல்லை.

தியேட்டர் இயங்கினாலும் இல்லை என்றாலும் பராமரிப்புக்கான செலவு தவிர்க்க முடியாதது. இந்த சூழ்நிலையில் பல திரையரங்குகள் தொழிலைவிட்டு விலகியுள்ளன. பல திரையரங்குகள் தற்போது கெரோனா இரண்டாவது அலையில் சிக்கி தள்ளாடி வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது அலையால் சென்னை அண்ணா சாலையில் அரை நூற்றாண்டு காலமாக இயங்கிவரும் தேவி தியேட்டர் விரைவில் மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் நிர்வாகம் உண்மை நிலவரம் குறித்து

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரபல செய்தித்தாளில் வெளியான செய்தி முழுக்க தவறானது என்றும், தங்களுடைய தேவி திரையரங்கம் 51 ஆண்டுகளாக அவ்வப்போது புதுப்புது தொழில்நுட்பங்களை உட்புகுத்திப் பல திரைப்படங்களைத் திரையிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக கொரோனா காரணமாக தியேட்டர் வளாகத்தையும் அதன் தொடர்புடைய பிற இடங்களையும் மருத்துவத் துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகிறோம். இதனை அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். நிலைமை இப்படி இருக்கத் திரையரங்கை நிரந்தரமாக மூடப் போவதாகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறியதாக நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறானது. இந்த செய்தியை வெளியிட்ட நாளிதழ் உடனடியாக மறுப்பு தெரிவிக்கவேண்டும் என்று சம்பந்தபட்ட நாளிதழுக்குத் தேவி தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வியாழன் 3 ஜுன் 2021