மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

அரசின் உதவியை நாடிய ராஜமெளலி: நினைப்பது நடக்குமா?

அரசின் உதவியை நாடிய ராஜமெளலி: நினைப்பது நடக்குமா?

பாகுபலி படங்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படைப்பு ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாகப் படம் தாமதமானது. இந்த ஆர்.ஆர்.ஆர் படத்துக்குத் தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் லீட் ரோலில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் நம்ம ஊர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் படத்தின் ஷூட் பாக்கி இருக்கிறது. இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில மாண்டேஜ் ஷாட்டுகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம். அதனால், படம் தள்ளிப்போகும் எனச் சொல்லப்பட்டது.

தெலுங்கு படப்பிடிப்புகளை கொரோனாவினால் முன்கூட்டியே நிறுத்திவிட்டனர். இப்போது படத்தை எப்படியாவது சொன்ன தேதியில் வெளியிட முயற்சியில் இறங்கிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அதற்காக, தெலுங்கானா அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது படக்குழு.

அனுமதி கிடைத்தால், ஜூன் மாத இறுதி வாரம் ஷூட் மறுபடியும் தொடங்கும். ஒரே ஷெட்யூலில் மீதமிருக்கும் காட்சிகளைக் குறைவான நபர்களோடு முடிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த திட்டத்தின்படி, எல்லாம் நடந்தால், சொன்ன தேதியில் படம் தயாராகி, வெளியாகும். திட்டமிட்டபடி, வெளியாகுமா... பொருத்திருந்து பார்க்கலாம்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

புதன் 2 ஜுன் 2021