மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

நயன்தாராவின் கூழாங்கல்லுக்கு சர்வதேச விருது!

நயன்தாராவின் கூழாங்கல்லுக்கு சர்வதேச விருது!

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சினிமாவில் தங்களின் பிரதான தொழிலைக் கடந்து தயாரிப்பு, விநியோகம் இவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்காகத் தொடங்கப்பட்டதுதான் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம்.

நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும் ’நெற்றிக்கண்’ படத்தை ரெளடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார்கள். அடுத்ததாக ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தயாரித்துவரும் ரெளடி பிக்சர்ஸ், இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியது.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘கூழாங்கல்’ படத்தை, முதற்பிரதி அடிப்படையில் ரெளடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.

புதியவர்கள் கோடம்பாக்கம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்கும்போது அதனை வியாபாரம் செய்யவும், சர்வதேச அளவில் விருது விழாக்களுக்கு அனுப்பவும் பிரபலமான நிறுவனங்கள் அடையாளம் தேவைப்படுகிறது இல்லையென்றால் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பார்கள்.

ஒருகுடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவை மையப்படுத்தி கதை உருவான படம் கூழாங்கல். இந்த படத்தை பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும், ”கூழாங்கல் படம் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்து இருந்தனர். அதனையொட்டி கூழாங்கல் படத்தை பொது தளங்களில் புரமோஷன் செய்யும் பணிகளை ரௌடி பிக்சர்ஸ் மூலம் செய்து வந்தனர்.

“ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு எண்ணம்,இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த ’கூழாங்கல்’ திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் வினோத் ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள் இயக்குனரால் எடுத்தப்பட்ட இப்படத்திற்கு தன்னுடைய பின்னணி இசையால் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா” என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில்,நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற 50ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு"கூழாங்கல்"போட்டியிட்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது போட்டியில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல், இரண்டாவது இந்தியப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய" செக்ஸி துர்கா" என்ற மலையாளப்படத்துக்கு இந்த விழாவில் விருது கிடைத்தது.

நியூயார்க் நகரில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் திரையிடப்பட்டுச் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்துக்குக் கிடைத்த இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 1 ஜுன் 2021