மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் படங்களும் ஓடிடிக்கு வருதா?

சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் படங்களும் ஓடிடிக்கு வருதா?

திரையரங்குகள் இல்லை என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் ஓடிடிக்குப் பின்னால் செல்ல தொடங்கிவிட்டது. இதற்குப் பெரிய பட்ஜெட் படங்களும் விதிவிலக்கல்ல.

திரையரங்க ரிலீஸுக்காகக் காத்திருக்காமல் ஓடிடிக்குப் படங்கள் செல்லவும் காரணம் இருக்கிறது. தயாரிப்பாளர் ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால், நேரடியாக அவர் பணத்தை கொடுக்க மாட்டார். ஃபைனான்ஸியர்களிடம் பெற்றே பெரும்பாலும் படங்கள் தயாரிக்கப்படுகிறது. படம் வெளியாகும்போது ஃபைனான்ஸியருக்குப் பணம் செட்டில் செய்யப்படும். குறித்த நேரத்தில் படத்தை வெளியிடாமல் போனால் ஃபைனான்ஸியருக்கான வட்டி அதிகரிக்கும். அது படத்தின் பட்ஜெட்டில் எதிரொலிக்கும். இப்படி, எக்கச்சக்க காரணங்கள் இருக்கிறது. அதனால், இந்தச் சூழலில் படங்கள் பெரும் லாபம் கிடைக்கவில்லை என்றாலும், நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் படத்தை ரிலீஸ் செய்வதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். அப்படி, எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் வெளியாகிவருகிறது. அந்த வரிசையில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் படங்களும் ஓடிடிக்கு வர இருக்கிறது.

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்.

இயக்குநர் கௌதம் மேனனிடம் அசோஷியேட் இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்து உருவாகியிருக்கும் படம் 'FIR'. இந்தப் படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்களான கௌதம் மேனன், கௌரவ் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். திரையரங்குக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூழல் காரணமாக நேரடியாக ஓடிடிக்கு வர இருக்கிறது. இந்தப் படம் ஓடிடிக்கு வருவதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் தயாராகி வருகிறது. அதனால், ரிலீஸை முடுக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஷ்ணு விஷால். அதனால், தன்னுடைய படத்தை ஓடிடியில் வெளியிடும் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் 'வாழ்'

அருவி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அருண் பிரபு. இவரின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வரும் படம் ‘வாழ்’. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு 2019 ஜூலையில் தொடங்கியது. டிராவல் மியூசிக்கல் டிராமாவாகப் படம் உருவாகி இருக்கிறதாம். பாடகர் பிரதீப் குமார் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. படத்தைத் திரையரங்கில் வெளியிட சாத்தியம் இல்லை என்பதால், நேரடியாக ஓடிடியில் வெளியிட இருக்கிறது படக்குழு. வாழ் படத்தை சோனி லைவ் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்தப் படம் யு/ஏ சான்றோடு 1 மணி நேரம் 54 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. அருவி பெரிய ஹிட் என்பதால், வாழ் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- ஆதினி

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 1 ஜுன் 2021