மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

கடிதம் எழுதும் போட்டி: அப்டேட் குமாரு

கடிதம் எழுதும் போட்டி: அப்டேட் குமாரு

டியர் மோடிஜி ஓபிஎஸ், இபிஎஸ் ரெண்டு -பேரையும் பார்த்தா என் பள்ளிக்கூட நாட்கள் எல்லாம் திடீர்னு ஞாபகத்துக்கு வருது.ஸ்கூல்ல கட்டுரை போட்டி கடிதம் எழுதும் போட்டியெல்லாம் நடக்கும். இப்ப ஒரே நாள்ல அதிமுகவோட இபிஎஸ் ஒரு கடிதம், ஓபிஎஸ் ஒரு கடிதம்னு போட்டு போட்டுக்கிட்டு உங்களுக்கு அனுப்புறாங்க. கடிதம் எழுதும் போட்டியில யாருக்கு பரிசு கொடுப்பீங்கனு சீக்கிரம் சொல்லிடுங்க. இல்லேன்னா டெய்லி உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பிச்சுடுவாங்க.

மயக்குநன்

கொரோனாவுக்கு எதிரான போரில் நமது ஆயுதத்தை கீழே இறக்கக் கூடாது!- பிரதமர் மோடி.

அதாவது... மூக்கு, வாய்க்கு போட வேண்டிய மாஸ்க்கை, கீழே இறக்கி தாடைக்குப் போடாதீங்கனு சொல்றாரு..!

ச ப் பா ணி

பரிட்சைனா பயம்னு இருந்த ஒரு தலைமுறையை..

பள்ளிகூடமென்றால் பயம்னு மாற்றிய பெருமை கொரொனாவையே சாரும்

தர்மஅடி தர்மலிங்கம்

"தனியாருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது தடுப்பூசி?" - ப. சிதம்பரம்!

அதெல்லாம் கம்பெனி சீக்ரெட் உங்ககிட்ட சொல்றதுக்கில்லை..

செங்காந்தள்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை தற்போதைக்கு கணிக்க முடியாது!- WHO.

இதற்கு காரணம் இதுதான்.

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது - மோடி

நாகராஜசோழன்.MA.MLA

18+ அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு உறுதி .

100 கோடி பேருக்கு எப்படி இந்த வருட கடைசி குள்ள போட முடியும்...!??

balebalu

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா.. டெல்டா என அழைக்கப்படும்.. உலக சுகாதார மையம்

பேரு வெக்குறதிலே பிசியா இருக்குற தெய்வமே ! தடுப்பூசி எங்கய்யா ?

PrabuG

நம்ம நாட்டோட GDP 7க்கு வந்துடுச்சு.

ஜி ~ சொல்லுங்க. நான் இப்ப எவ்வளவு கிளிசரின் ஆர்டர் போடனும்..

தர்மஅடி தர்மலிங்கம்

“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” - சசிகலா!

ஒருவேளை.. கிளம்பி "ஷாப்பிங்" பண்ண போய்டுவாங்களோ..??

சரவணன். ℳ

"இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை தற்போதைக்கு கணிக்க முடியாது" - WHO

எல்லோரும் பாதிக்கப்பட்ட பிறகாவது கணிக்க முடியுமா ஆபிஸர்ஸ்..?

மயக்குநன்

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது!- பிரதமர் மோடி.

கொரோனா பாதிப்பு பட்டியலில், உலக அளவில் 2-வது இடத்துக்கு வந்துட்டதை வெச்சு சொல்றாரோ..?!

கோழியின் கிறுக்கல்!!

பெண்கள் கணவனையும் மிக்ஸியையும் ஒரே மாதிரி தான் டீல் செய்கிறார்கள்!

லைட்டா சத்தம் அதிகம் ஆச்சுன்னா, தலையில் ரெண்டு தட்டுத் தட்டி அடக்கி விடுகிறார்கள்!!

-லாக் ஆப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

செவ்வாய் 1 ஜுன் 2021