மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

கெளதம் கொடுத்த சாய்ஸ்.. யாரை தேர்ந்தெடுப்பார் சிம்பு!

கெளதம் கொடுத்த சாய்ஸ்.. யாரை தேர்ந்தெடுப்பார் சிம்பு!

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை கமிட் செய்து வருகிறார் சிம்பு. முன்னோட்டமாக, இவர் நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படம் அமைந்தது. படம் பெரிய ஹிட் இல்லையென்றாலும், சிம்புக்குப் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ முடித்துவிட்டார். யுவன் இசையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவிலேயே படம் வெளியாகும். அடுத்ததாக, கன்னட படமான மஃப்டியின் தமிழ் ரீமேக்கான பத்து தல படத்தில் நடிக்கிறார். ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்பு நடிக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கெளதம் மேனன் படத்தில் இணைகிறார் சிம்பு. இந்தப் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் புது அப்டேட் என்னவென்றால், படத்துக்கான நடிக நடிகையர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட ‘விண்னைத் தாண்டி வருவாயா’ பட சீக்குவலாக உருவாவதாகத் தகவல். இந்நிலையில், படத்தில் நாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது கெளதமின் ஃபேவரைட் ரீத்து வர்மாவை கமிட் செய்வோமா என்பதில் கெளதம் மேனனுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது.

இறுதியாக, எதற்கு பிரச்னை என்று ஹீரோயின் தேர்வை சிம்புவிடம் விட்டுவிட்டார்களாம். த்ரிஷா இல்லைனா ரீது வர்மா. இருவரில் யாருக்கு சிம்பு ஓகே சொல்ல இருக்கிறார் என்பதில் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 1 ஜுன் 2021