மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

வசூல் வேட்டை நடத்திய 2 ஹாலிவுட் படங்கள்!

வசூல் வேட்டை நடத்திய 2 ஹாலிவுட் படங்கள்!

ஹாலிவுட் படங்களுக்கு உலகளவில் நல்ல எதிர்ப்பார்ப்பும் வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. மற்ற மொழிப் படங்களை ஒப்பிடும் போது, ஹாலிவுட் படங்களுக்கு ஓப்பனிங் வசூல் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில் உலகமெங்கும் பல இடங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அப்படியே திறந்திருந்தாலும் குறைவான இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதோடு, அச்சத்தின் காரணமாக மக்கள் திரையரங்கம் பக்கம் வர தயக்கம் காட்டிவருகின்றனர். இப்படியான சூழலில் இரண்டு ஹாலிவுட் படங்களின் வசூல் ஹாலிவுட்டையே மிரளவைத்துள்ளது.

சமீபத்தில் உலகமெங்கும் வெளியான ‘காட்ஸில்லா வெர்ஸ் காங்’ படம், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்துவதற்கான வழியை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்கில் மிகப்பெரிய கலெக்‌ஷனைக் கொடுத்தப் படம் காட்ஸில்லா. தமிழில் விஜய் நடித்த மாஸ்டர் எப்படி திரையரங்கிற்கு உயிர்கொடுத்ததோ, அதுபோல ஹாலிவுட்டின் மகிழ்மதியை தட்டி எழுப்பியது ‘காட்ஸில்லா வெர்ஸ் காங்’.

இந்தப் படத்தைத் தொடந்து வெளியான ‘மார்டல் காம்பக்ட்’ படமும் நல்ல லாபம் பார்த்தது. தமிழ் சினிமாவோடு ஒப்பிடவேண்டுமென்றால், கார்த்தியின் சுல்தான் படத்துக்கு கிடைத்த ஓரளவு வசூலையும் வரவேற்பையும் ஒத்தது ‘மார்டல் காம்பக்ட்’ பட வசூல். அதன்பிறகு, கடந்த மே 19ஆம் தேதி குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் வெளியாகி பெரும் லாபத்தைப் பார்த்திருக்கிறது ‘ஃபாஸ்ட் 9’. ஜஸ்டின் லின் இயக்கத்தில் ஃபார்ஸ்ட் & ஃப்யூரியஸ் பட வரிசையின் ஒன்பதாவது பாகமாக வெளியாகியிருக்கிறது ‘ஃபாஸ்ட்’. உலகமெங்கும் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களுக்கான ரசிகர்கள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்தப் படத்தை, உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, இறுதியாக, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் ரிலீஸ் செய்ய காரணம் இந்த கொரோனா தான். இக்கட்டான சூழலிலும், இந்தப் படம் ஒரே வாரத்தில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்துள்ளது. வருகிற ஜூன் 25-ஆம் தேதி இன்னும் சில நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் படத்தோடு ஒப்பிடவேண்டுமென்றால், தனுஷ் நடித்த கர்ணன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு போல, பட்ஜெட்டைப் பொறுத்து பெரியளவில் கலெக்‌ஷனையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வெளியான,‘A Quiet Place 2’ படமும் நல்ல லாபம் பார்த்து வருகிறது. 61 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்தப் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 58.5 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கிறதாம். குறிப்பிட்ட சில நாடுகளில்தான் இப்போதைக்கு ரிலீஸ் ஆகியிருக்கிறது. சீக்கிரமாகவே, மற்ற நாடுகளிலும் ரிலீஸாக இருக்கிறது.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 1 ஜுன் 2021