மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

ரியல் கேங்ஸ்டர்... : ‘ஜெகமே தந்திரம்’ டிரெய்லர் !

ரியல் கேங்ஸ்டர்...  : ‘ஜெகமே தந்திரம்’ டிரெய்லர் !

பரியேறும் பெருமாள் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் அடுத்த படமான ஜெகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் `ஜகமே தந்திரம்'. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால், நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட இருப்பதாக அறிவித்தது தயாரிப்பாளர் தரப்பு.

தனுஷின் ஜெகமே தந்திரம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே, படத்துக்கான டீசரையும், ரகிட ரகிட பாடல், புஜ்ஜி, நேத்து என வெளியான மூன்று வீடியோ பாடல்களும் செம ஹிட். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிலீஸூக்கு குறைவான நாட்களே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷனாக படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இப்படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி உரிமை பெற யு/ஏ சான்றிதழுக்கு மீண்டும் ஒருமுறை சென்சார் செல்ல வேண்டியிருக்கும்.

தனுஷூக்கு கர்ணன் படத்தின் டீஸர் மட்டுமே வெளியானது. தற்பொழுது, ஜெகமே தந்திரம் படத்துக்கு டீஸர் மட்டுமின்றி டிரெய்லரும் வெளியாகியிருக்கிறது. அதனால், தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகின்றனர்.

இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி, இந்திய மொழிகளில் டப் செய்து வெளியாக இருக்கிறது. கூடவே, ஹாலிவுட் வரை தனுஷ் புகழ் கொடிகட்டிப் பறப்பதால் ஆங்கிலத்திலும் டப்பாகி வெளியாக இருக்கிறது.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 1 ஜுன் 2021