மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

கிராமத்தை தத்தெடுத்த மகேஷ்பாபு

கிராமத்தை தத்தெடுத்த மகேஷ்பாபு

தெலுங்கு சினிமா நடிகர்களில், முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு.

இவரது தந்தை நடிகர் கிருஷ்ணாவுக்கு நேற்று (மே 31) 78 வது பிறந்தநாள். ஹீல் ஏசைல்ட் அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்து வருகிறார் மகேஷ்பாபு. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் புர்ரே பாலெம், சித்தாபுரம் ஆகிய கிராமங்களை இந்த அறக்கட்டளை தத்து எடுத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்த அறக்கட்டளையுடன் இணைந்து 1000 க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்துள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை உக்கிரமடைந்து வரும் சூழலில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள், மற்றும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு நடிகர் சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

நேற்றைய தினம் தனது தந்தையின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு புர்ரே பாலெம் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பணியை முழுமையாக முடிக்க ஆந்திராவில் உள்ள பிரபலமான மருத்துவமனைகள் மகேஷ்பாபுவுக்கு நேற்று உதவிகரமாக இருந்துள்ளன.

நடிகர்களின் பிறந்த நாள் என்றாலே கட் அவுட், பாலாபிஷேகம், இலவச அன்னதானம், சமபந்திபோஜனம் என்கிற வழக்கத்திற்கு பழகிப்போனவர்கள் தமிழ், தெலுங்கு சினிமா நடிகர்கள்.

அந்த வழக்கம் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த வருடம் முழுவதும் எங்கும் நடைபெறவில்லை. இந்தியா எதிர்கொண்டுவரும் மருத்துவ நெருக்கடியில் ஆக்கபூர்வமாக தங்கள் பங்களிப்பை செலுத்தி வருவதில் இந்தியாவில் இந்தி,தெலுங்கு,மலையாள திரைப்பட நடிகர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 1 ஜுன் 2021