மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

எல்லா புகழும் கேப்டனுக்கே: அப்டேட் குமாரு

எல்லா புகழும் கேப்டனுக்கே: அப்டேட் குமாரு

டீ கடைக்கு போயி டீ குடிக்க முடியாததால, வீட்ல உக்காந்து டீ குடிச்சிக்கிட்டே ஃப்ரண்டுகிட்ட பழக்க தோஷத்துல மொக்கை போட்டுக்கிட்டிருந்தேன். ‘எல்லா புகழும் கேப்டனுக்குதான்யா’னு சொன்னாரு. என்ன திடீர்னு கேப்டன் புகழ் பாடுறீங்கனு நான் கேட்டதுக்கு, ‘அந்த மனுசந்தான்யா ரேஷன் பொருட்களை எல்லாம் வீடு தேடி வந்து கொடுப்பேனு வாக்குறுதி கொடுத்தாரு. அதை அவரால நிறைவேத்த முடியலைனாலும் கொரோனா வந்து இன்னிக்கு ஸ்டாலின் மூலமா செய்ய வைக்குது பாரேன்’னு சொல்லி சிரிச்சாரு. இது கேப்டனுக்குத் தெரியுமானு கேட்டுக்கிட்டே டீயை குடிச்சுட்டு போனையும் வச்சுட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க

செங்காந்தள்

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது- மோடி.

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது.

மயக்குநன்

வேண்டுமென்றே' பிரதமர் தலைமையிலான புயல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிக்கவில்லை!- மம்தா பானர்ஜி.

அப்ப... 'வேணாம்னுதான்' புறக்கணிச்சீங்களா தீதி..?!

ஷிவானி சிவக்குமார்

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது - மோடி

ஏழு வருசம் தாண்டீட்டோம்.! இன்னும் மூனு வருசம் தானேங்கிற சந்தோசம் ஜி

பர்வீன் யூனுஸ்

போன வருஷம் நாமும் பி.பி.இ. கிட் மாட்டிக்கிட்டு கொரோனா வார்டுக்கு போயிருந்தால் தேர்தலில் கூடுதலா பத்து, இருபது ஸீட் ஜெயிச்சிருக்கலாமோ..? # எடப்பாடி மைன்ட் வாய்ஸ்.

நாகராஜசோழன்.MA.MLA.

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெற்று தரும் பணியை எல்.முருகன் செய்ய வேண்டும். அமைச்சர் மா.சுப்ரமணியம்.

எல்லாம் export பண்ணியாச்சு...

தடுப்பூசி இல்லங்க...

balebalu

தள்ளு வண்டி ஷாப்பிங் க்கு மவுசை கூட்டியது கொரோனா காலம்

TotalLockdown

balebalu

பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவு; புதிய கல்வி ஆண்டு நாளை துவக்கம் -செய்தி

கொரோனா விடுமுறை எடுத்தால் தான் இனிமே மாணவர்களுக்கு நிஜமான கோடை விடுமுறை

ச ப் பா ணி

முழு பூசணிக் காயை டக் இன் செய்த சட்டைக்குள் மறைப்பது ஆண்களே

-தொப்பை

தர்மஅடி தர்மலிங்கம்

முழு ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

"கசப்பு மருந்து" வொர்க்கவுட் ஆகிடுச்சு.?!

வெண்பா

கொலை செய்ததை கூட சொல்லிடுவாங்க

இந்த கொரொனா வந்ததைத் தான் சொல்லமாட்டானுங்க

ச ப் பா ணி

சுகப்பிரசவம் தான் வேண்டுகிறோம்

ஆனால் சிசேரியன் செய்து விடுகிறோம்

-மாசக்கடைசியில் டூத் பேஸ்ட்

மயக்குநன்

மெகுல் சோக்சியை 'நாடு கடத்த' முடியாது!- டொமினிகா நீதிமன்றம் திடீர் தடை.

ஆகா... 'நாளைக் கடத்துற' வேலையை ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கே..?!

நாட்டுப்புறத்தான்

கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய தாரக மந்திரங்கள்...

1. முதலமைச்சர் ஸ்டாலின் போல் விழிப்போடு இருங்கள்...

2. பிரதமர் மோடி போல் தனித்திருங்கள்...

3. அதிமுக எம்எல்ஏக்கள் போல் வீட்டிலேயே இருங்கள்...

கோழியின் கிறுக்கல்!!

பெண்களின் Makeup kitல், ஒரு புதிய வரவு,

Mask!!

- லாக் ஆப்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

திங்கள் 31 மே 2021