மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

ஐபிஎல் இடமாற்றத்துக்கான காரணம் என்ன?

ஐபிஎல் இடமாற்றத்துக்கான காரணம் என்ன?

ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த இடமாற்றத்துக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4ஆம் தேதி ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை இந்தப் போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரபூர்வமாக அறிவித்தது. பிசிசிஐயின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கான காரணம் குறித்து பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா விளக்கியுள்ளார்.

“செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐபிஎல் ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13ஆவது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்டது.

இதில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த முறை வெல்லப்போவது யார் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பேட் கம்மின்ஸ், எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

திங்கள் 31 மே 2021