மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

அமிதாப்பச்சன் புதிய வீடு வாங்கியது எதற்காக ?

அமிதாப்பச்சன் புதிய வீடு வாங்கியது எதற்காக ?

அமிதாப்பச்சன் மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அமிதாப்பச்சன் மும்பை அந்தேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28ஆவது மாடிகளை இணைக்கும் வகையிலான இரண்டு வீடுகளை வாங்கி உள்ளார்.

சென்னையில் தமிழ் சினிமா நடிகர்கள் தி.நகர், போயஸ்கார்டன், அடையார் போட்கிளப் பகுதிகளில் தங்களது குடியிருப்பை அமைத்துக் கொள்வதை 1990களுக்கு முன்னர் கௌரவமிக்கதாக கருதினார்கள்.

அதற்கு பின் திரையுலகுக்கு வந்து பிரபலமானவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வீடு வாங்குவதை பெருமைக்குரிய விஷயமாக கருதி முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதற்கு காரணம் நகருக்குள் இருந்து அஜீத், விஜய், கமலஹாசன் போன்றோர் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

அதேபோன்று இந்தி திரையுலக பிரபலங்கள் மும்பை அந்தேரி பகுதியில் வீடு வாங்குவதை லட்சியமாகவும், கொள்கையாகவும் கொண்டுள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள்

நடிகை சன்னி லியோன், இயக்குனர் ஆனந்த் எல்.ராய், ஆலியா பட், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் இங்கு வீடு வாங்கி உள்ளனர்.

அமிதாப் பச்சன் வாங்கி உள்ள வீட்டின் மதிப்பு 31 கோடி ரூபாய். 5500 சதுர அடிகளை கொண்ட இந்த வீட்டுக்கு 6 கார் பார்க்கிங் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திர பதிவு கட்டணமாக மட்டும் 62 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.

சினிமாவில் அபரிமிதமாக சம்பாதிக்கும் திரையுலக பிரபலங்கள் நிலங்கள் அல்லது வீடு, ஆடம்பர கார்களை வாங்குவது இயல்பு. அமிதாப்பச்சனை பற்றி கூறுபவர்கள் வீடுகளின் காதலர் என அவரை குறிப்பிடுகின்றனர் மும்பையில் அனைத்து பகுதிகளிலும் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு சொந்த வீடுகள் நிறைய உள்ளது அதேபோன்று வெளிநாட்டிலும் சொந்தமாக வீடுகளை வாங்கி உள்ளார்கள்.

அமிதப்பச்சன் இந்தி சினிமாவில் வளர்ந்து வந்த காலமது, அவரது மகன் அபிஷேக்பச்சன் படித்து வந்த தனியார் பள்ளியில் மின்விசிறி வசதி கிடையாது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு தனி மேஜை, நாற்காலி என்பது உயர்ந்த பட்சமாக கருதப்பட்டது. மின்விசிறி என்பது எப்படி இருந்திருக்கும். தினந்தோறும் பள்ளி முடிந்து வீட்டில் மின்விசிறி சுகத்தை அனுபவித்த அபிஷேக் பச்சன் தந்தையிடம் தனது வகுப்பறையில் மின்விசிறி வசதியில்லை என்பதை சாதாரணமாக கூறியுள்ளார்.

அமிதாப் திடீர் என ஒரு நாள் அபிஷேக்பச்சன் படிக்கும் பள்ளிக்கு சென்று மகனின் வகுப்பறையை பார்வையிட்டவர், பள்ளி நிர்வாகத்திடம் மின்விசிறி ஏன் இல்லை என்பதை பற்றி கேட்டபோது, நிர்வாகத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என கூறியுள்ளனர்.

பள்ளியில் மொத்தம் எத்தனை வகுப்பறைகள் உள்ளது என்பதை கேட்டறிந்து கொண்ட அமிதாப்பச்சன் தனது சொந்த செலவில் அனைத்து வகுப்பறையிலும் மின்விசிறி இணைப்பை ஏற்படுத்திக்கொடுத்து பள்ளி நிர்வாகத்தை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

மகன் படிக்கும் வகுப்பறைக்கு மட்டும் மின் விசிறி வசதி செய்து கொடுத்து இருக்கலாமே என அவரிடம் பள்ளி நிர்வாகம் கேட்டபோது அவன் வகுப்பறைக்கு மட்டும் மின்விசிறி என்பது அவனை தனித்துகாட்டும் அது மற்ற மாணவர்களிடம் இருந்து அவனை தனிமைப்படுத்திவிடும்.

இதனால் அவனது மனநலம், கல்வி பாதிக்கப்படும், இரண்டாவது, ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த வகுப்புக்கு புரமோஷன் ஆகும்போது வகுப்பறை மாறும், அதனால்தான் அனைத்து வகுப்பறைக்கும் தொலைநோக்கு பார்வையுடன் மின்விசிறி வசதியை செய்தேன் என்றாராம் அமிதாப்பச்சன்.

அதே போன்றுதான் தற்போது புதிதாக வாங்கியிருக்கும் வீடு என்கிறார்கள் அமிதாப்பை பற்றி அறிந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மும்பை நகரம், மூன்றாவது அலையும் உக்கிரமாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள்.

இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

திங்கள் 31 மே 2021