மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

ஷாரூக் படத்தால் அட்லீக்கு நேர்ந்த துயரம் !

ஷாரூக் படத்தால் அட்லீக்கு நேர்ந்த துயரம் !

தொட்டதெல்லாம் வெற்றியாக்கும் இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வெகுசிலரே. அப்படியானவர் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என இயக்கிய நான்கு படங்களுமே வியாபார ரீதியாக நல்ல ஹிட் கொடுத்தது.

தமிழில் விஜய்யை இயக்கியவருக்கு இந்தியில் ஷாரூக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிகில் முடித்த கையோடு ஷாரூக் படத்தை துவங்கினார் அட்லீ. ஷாரூக் கைவசம் படங்கள் இருந்ததால் கொஞ்சம் காலதாமதமானது. தற்பொழுது, அட்லீ இயக்க ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கான முதல் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

சமீபத்தில் படத்துக்கான முழு கதையையும் முடித்து, ஷாரூக்கிடம் கொடுத்திருக்கிறார் அட்லீ. படத்தின் கதையும் பிடித்துப் போக பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது ஷாரூக்கின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட். படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிக்காக மும்பையில் இருக்கிறார் அட்லீ.

படத்தின் செலவுகளை நிர்ணயிப்பதில் அட்லீக்கு பெரும் உதவியாக இருப்பவர் கலை இயக்குநர் முத்துராஜ். படத்தின் காட்சிகளை முத்துராஜிடம் அட்லீ கூறிவிடுவார். இந்த சீனுக்கு, இப்படியான செட் அமைக்க வேண்டுமென முடிவு செய்து இவ்வளவு தொகையாகும் என முத்துராஜ் சொல்லுவார். அந்த தொகையை தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி கொடுத்துவிடுவார் அட்லீ. இதுதான், அட்லீயின் ஒர்க் பேட்டர்ன். இந்த ஒர்க் ஸ்டைல் பாலிவுட்டில் கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

ஒரு சின்ன செலவு என்றாலும் நேராக அட்லீக்கு போன் அடித்துவிடுகிறார்களாம் தயாரிப்பு தரப்பான ரெட் சில்லீஸ் நிறுவனம். இது என்ன செலவு, இதற்கு ஏன் இந்த தொகை என கேட்டு குடைச்சல் கொடுக்கிறார்களாம். முறையாக அனைத்து பில்களையும் கேட்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒருவர் போன் செய்தால் கூட பரவாயில்லை. இரண்டு - மூன்று பேர் ஒரே விஷயத்துக்கு போன் செய்து விசாரிக்கிறார்களார்களாம். தயாரிப்புத் தரப்புக்கு பதில் சொல்லுவதிலேயே பெரும் நேரம் போய்விடுகிறதாம். எப்போதுமே ஒரு டென்ஷனிலேயே அட்லீயை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஷாரூக் படத்தை ஏன் கமிட் செய்தோம் என வருத்தப்படும் அளவுக்கு அழுத்தம் நிறைந்த வேலையாகிவிட்டதாக அட்லீ கருதுவதாக உடன் இருக்கும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

திங்கள் 31 மே 2021