மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

பகத் செய்த குழப்பத்தில் ஏமாந்த பிரபுதேவா... விக்ரம் பட சிக்கல்!

பகத் செய்த குழப்பத்தில் ஏமாந்த பிரபுதேவா... விக்ரம் பட சிக்கல்!

அரசியல் தந்த பெரும் ஏமாற்றத்துடன் மீண்டும் திரைத்துறை பக்கம் திரும்பியிருக்கிறார் கமல்ஹாசன். நடிகராக கமல்ஹாசனை என்றென்றுமே ரசிப்பார்கள் ரசிகர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது, கமல்ஹாசன் கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றன.

லைகா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன் 2` , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `விக்ரம்` மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் `தலைவன் இருக்கின்றான்` படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

முதலாவதாக, இந்தியன் 2 படத்தின் ஸ்டேட்டஸ் என்னவென்றால், படத்தின் முக்கால் பாக ஷூட்டிங் ஓவர். ஷங்கர் ஷூட்டிங்கிற்கு கமலை அழைத்த போது அரசியல் வேலை காரணமாக வரவில்லை. இப்போது லைகா நிறுவனம் ஷூட்டிங்கிற்கு அழைப்பு விடுக்கும் போது, ஷங்கர் வரமுடியாது என்று சொல்லிவிட்டார். இப்படியே, சிக்கல் நீண்டுகொண்டே போகிறது. விரைவில் முடிவு எட்டும். இந்தியன் 2 தயாராகும்.

தற்பொழுது, கமல்ஹாசனின் முழு கவனமும் விக்ரம் படத்தின் மீது தான். மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

கமல்ஹாசனுடன் முக்கிய ரோலில் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமானார். விக்ரம் படத்தில் நடிப்பதை அவரே உறுதியும் செய்திருந்தார். பகத்தோடு விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

தமிழில் விஜய்சேதுபதி எப்படியோ, மலையாளத்தில் பகத். அடுக்கடுக்காக பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். லாக் டவுனில் படப்பிடிப்புக்கே பலர் தயக்கம் காட்டிவந்த சூழலில் இரண்டு படங்களை முடித்து ஓடிடியில் வெளியிட்டார். இந்த வருடம் நெட்பிளிக்ஸில் `இருள்` மற்றும் பிரைம் வீடியோவில் `ஜோஜி` படங்கள் வெளியானது. இரண்டுமே லாக் டவுனுக்காகவே யோசித்து எடுத்த கதைகள். இரண்டு படங்களுமே ஒரே வீட்டுக்குள் முழு கதையையும் படமாக்கி, மிரட்டியிருப்பார்கள்.

அடுத்தடுத்து மாலிக், மலையன்குஞ்சி, அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதற்கு நடுவே ஓடிடிக்கென சில படங்களும் கையில் வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக படங்கள் கமிட் செய்துவருவதால், விக்ரம் படத்திற்கு தேதி கொடுக்க முடியாத சூழல் நிலவியதாகச் சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்திலிருந்து பகத் பாசில் விலகிவிட்டதாகவே கூறப்பட்டது. பகத்துக்கு பதில் யாரை நடிக்க வைக்கலாம் என தேடி பிரபுதேவாவை டிக் செய்தார் கமல். பிரபுதேவா & கமல் காம்போவில் காதலா காதலா படம் செம ஹிட். அதன்பிறகு, இந்த கூட்டணி இணைய இருக்கிறது என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் புது திருப்பம் ஒன்று நடந்திருக்கிறது.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தள்ளிப் போவதால், பகத்துக்கு நிறைய தேதிகள் கிடைக்கிறதாம். அதனால், மீண்டும் விக்ரம் படத்தில் நடிக்க தேதி ஒதுக்குவதாக ராஜ்கமல் நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

இப்போது, பகத்தே மீண்டும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், பிரபுதேவாவை கழட்டிவிட்டுவிட்டார் கமல். பகத்தை ஒப்பிடும் போது கமர்ஷியல் நடிகராகவே பிரபுதேவா மக்கள் மத்தியில் பதிந்துள்ளார். படத்தின் கேரக்டருக்கு பகத் மாதிரியான சீரியஸான முகம் கொண்ட நடிகர் வேண்டுமென்பதால், பகத்தை விட்டுக் கொடுக்க கமலுக்கு விருப்பமில்லையாம்.

கடைசியாக, பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பிரபுதேவாவுக்கு பெரிய ஏமாற்றம் ஆகியிருக்கிறது. பகத் செய்த குழப்பத்தால் பிரபுதேவா ஆசைப்பட்டது நிராசையாகிவிட்டது.

- தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஞாயிறு 30 மே 2021