மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

தமிழில் 4 முக்கிய புதுப் படங்களை ரிலீஸ் செய்யும் SonyLIV ஓடிடி

தமிழில்  4 முக்கிய புதுப் படங்களை ரிலீஸ் செய்யும் SonyLIV ஓடிடி

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஷங்கர், மணிரத்னம் மாதிரியான உச்ச இயக்குநர்களின் படங்கள் என்றால் மட்டுமே திரையரங்கில் மக்கள் கூட்டம் வரும். இந்த கொரோனா சூழலில் இதுதான் நிலை. கடந்த லாக்டவுன் தளர்வில் எத்தனையோ படங்கள் வெளியானாலும் மாஸ்டர், கர்ணன், சுல்தான் படங்களுக்கு மட்டுமே மக்கள் கூட்டம் வந்ததை உதாரணமாகக் கூறலாம்.

இனிவரும் காலத்தில் திரையரங்கை விட ஓடிடியில் அதிகமான படங்கள் ரிலீஸாகும் என்று டிரேடிங் வட்டாரங்கள் கணிக்கிறது. அதற்கு ஏதுவாக, பெரிய ஹீரோக்களின் படங்களில் துவங்கி சின்ன பட்ஜெட் படங்கள் வரை ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கிறது.

தனுஷ் நடிக்க ஜெகமே தந்திரம், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படங்களும் ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. ஓடிடி ரிலீஸ் படங்கள் அதிகமாவதால், அதை வெளியிடும் ஓடிடி தளங்களும் அதிகமாகிவருகிறது.

தமிழில் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, சன் நெக்ஸ்ட் , ஹாட் ஸ்டார் என ஐந்து ஓடிடி தளங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த லிஸ்டில் இடம் பிடிக்க சோனி லிவ் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறது.

பாலிவுட்டில் டாப் ஓடிடி தளமாக இருக்கும் சோனி லிவ், தமிழில் முக்கிய 4 புதுப் படங்களை வாங்கி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது.

கடைசி விவசாயி

2015ல் வெளியான காக்கா முட்டை படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை மாதிரியான படங்களை இயக்கினார். இப்படங்களைத் தொடர்ந்து நீண்ட காலமாக உருவாகிவரும் படம் கடைசி விவசாயி. படத்தில் நல்லாண்டி என்கிற முதியவர் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் இந்தப் படம் சோனி லைவ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

நெற்றிக்கண்

அவள் படத்தின் இயக்குனர் டைரக்டர் மிலன் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் படம் ‘நெற்றிக்கண்’. டைரக்டர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும், இந்த படம் பிரபல கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். கொரியாவில் பெரிய ஹிட்டான இந்த படம் சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போ, தமிழ் ரீமேக் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. கொரோனா 2வது அலை காரணமாக நேரடியாக சோனி லிவ் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

ஏற்கெனவே, நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

நரகாசூரன்

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நேரன். இவர் இயக்கத்தில் இரண்டாவதாக தயாரான படம் `நரகாசூரன்`. ஆனால், இப்படத்துக்குப் பிறகு தயாரான `மாஃபியா சேப்டர் 1` படம் வெளியாகிவிட்டது. தனுஷ் நடிக்க டி-43 படத்துக்கும் சென்றுவிட்டார். ஆனால், நரகாசூரன் வெளியாகவில்லை. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். நீண்ட நாளாக வெளியாகாமல் கிடப்பில் இருந்த நரகாசூரன் சோனி லீவ் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

ராக்கி

இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ராக்கி. இந்தப் படத்தைப் பார்த்த விக்னேஷ் சிவன் மேக்கிங் பார்த்து ஆச்சரியப்பட்டதோடு, அவரின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை வாங்கி வெளியிடுகிறார். கொலையும் கொலை நிமித்தமுமாக மொத்த படமும் டிராவல் ஆகிறது. படத்தின் டீஸர் வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தையும் பெரும் விலைக்கு சோனி லிவ் ஓடிடிக்கு விற்பனை செய்திருப்பதாக ஒரு தகவல்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 30 மே 2021