மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

இங்கிலாந்தில் வெற்றி பெற விராட் கோலிக்குப் பொறுமை வேண்டும் - கபில்தேவ்

இங்கிலாந்தில் வெற்றி பெற விராட் கோலிக்குப் பொறுமை வேண்டும் - கபில்தேவ்

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் அதீத ஆக்ரோஷமாகச் செயல்படக் கூடாது என்றும் கபில்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விராட் கோலிக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து, சமீபத்தில் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில், “இந்திய கேப்டன் விராட் கோலி பொறுமையாகப் பேட்டிங் செய்ய வேண்டும். அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் களம் இறங்கிய உடனே ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது பலன் அளிக்காது. ஏனெனில் அங்கு பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். அதைத் துல்லியமாக கணித்து பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு பகுதியாக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்த தனக்குரிய தருணத்துக்காகக் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதிக ரன்கள் சேர்க்க முடியும்.

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என்பதை இந்திய அணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இந்திய பந்து வீச்சாளர்கள் அங்குள்ள ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் மாறும். அங்குள்ள மைதானங்களில் பந்து சரமாரியாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் இந்த வகையில் இந்திய அணியை விட இங்கிலாந்து வீரர்கள் ஒருபடி மேலே இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 30 மே 2021