மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

எஞ்சிய ஐபிஎல்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நிச்சயம்!

எஞ்சிய ஐபிஎல்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நிச்சயம்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று (மே 29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று உறுதிபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் நடந்து வந்த 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி நான்கு அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4ஆம் தேதி இந்தப் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

எஞ்சிய ஐபிஎல் தொடரில் முந்தைய ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் அனைவரும் இடம்பெறுவார்களா என்பது கேள்விகுறிதான்.

-ராஜ்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

ஞாயிறு 30 மே 2021